சீனாவுக்கு அடுத்தடுத்த நெருக்கடிகள் செயலிகளை தொடர்ந்து, ‘ஏசி, டிவி’களுக்கு தடைசீனாவுக்கு அடுத்தடுத்த நெருக்கடிகள் செயலிகளை தொடர்ந்து, ‘ஏசி, ... ... சிறு வணிகங்களுக்கு உலக வங்கி நிதியுதவி சிறு வணிகங்களுக்கு உலக வங்கி நிதியுதவி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஜூன் மாத வாகன விற்பனை கார் சரிவு; டிராக்டர் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2020
22:54

புது­டில்லி:கொரோனா பர­வல் கார­ண­மாக, நாடு முடக்­கப்­பட்­டி­ருந்­ததை அடுத்து, கடந்த ஜூன் மாதத்­தில், வாக­னங்­கள் விற்­பனை சரிவை கண்­டுள்­ளது. நாட்­டின் முன்­னணி வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளான, மாருதி சுசூகி, ஹூண்­டாய் உள்­ளிட்ட பல நிறு­வ­னங்­க­ளின் விற்­பனை சரிவை கண்­டுள்­ளது.


மாறாக, டிராக்­டர் விற்­பனை ஓர­ளவு அதி­க­ரித்­துள்­ளது. நாடு முடக்க அறி­விப்­பி­னால், விவ­சாய துறை அதி­கம் பாதிக்­கப்­ப­டாத கார­ணத்­தால், டிராக்­டர் விற்­பனை, பிற வாக­னங்­கள் விற்­ப­னை­யு­டன் ஒப்­பி­டும்­போது அதி­க­ரித்­து உள்­ளது.

56.4 சதவீதம்

மாருதி சுசூகி நிறு­வ­னத்­தின், ஜூன் மாத விற்­பனை, 54 சத­வீ­தம் சரி­வைக் கண்­டுள்­ளது. இம்­மா­தத்­தில், மொத்­தம், 57 ஆயி­ரத்து, 428 வாக­னங்­கள் விற்­பனை ஆகி­உள்­ளன. இதுவே, இதற்கு முந்­தைய ஆண்­டில், இதே ஜூன் மாதத்­தில், 1.25 லட்­சம் வாக­னங்­கள் விற்­பனை ஆகி­யி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.இந்­நி­று­வ­னத்­தின் உள்­நாட்டு விற்­பனை, மதிப்­பீட்டு மாதத்­தில், 53.7 சத­வீ­தம் சரி­வைக் கண்­டுள்­ளது.

ஏற்­று­ம­தி­யைப் பொறுத்­த­வரை, 56.4 சத­வீ­தம் சரிவு ஏற்­பட்­டுள்­ளது.இதே­போல், ஹூண்­டாய் மோட்­டார் நிறு­வ­னத்­தின் ஜூன் மாத விற்­ப­னை­யும், சரி­வைக் கண்­டுள்­ளது. இந்­நி­று­வ­னத்­தின் விற்­பனை, 54.39 சத­வீ­தம் அள­வுக்கு சரி­வைக் கண்­டுள்­ளது. மதிப்­பீட்டு மாதத்­தில், இந்­நி­று­வ­னம், 26 ஆயி­ரத்து, 820 வாக­னங்­களை விற்­பனை செய்­தி­ருக்­கிறது. இதுவே, இதற்கு முந்­தைய ஆண்­டில், இதே மாதத்­தில், 58ஆயி­ரத்து, 807 வாக­னங்­கள் விற்­பனை செய்­யப்­பட்டு இ­ருந்­தன.

கடுமையான சரிவு

ஏற்­று­ம­தியை பொறுத்­த­வரை, கடந்த ஆண்டு ஜூனில், 16 ஆயி­ரத்து, 800 வாக­னங்­கள்
விற்­பனை ஆகி­யி­ருந்த நிலை­யில், கடந்த ஜூனில், 5,500 வாக­னங்­கள்மட்­டுமே விற்­பனை
ஆகி­யி­ருந்­தன.டொயோட்டா கிர்­லோஸ்­கர் நிறு­வ­னத்தை பொறுத்­த­வரை, விற்­பனை,
63.53 சத­வீ­தம் அள­வுக்கு, கடு­மை­யான சரி­வைக் கண்­டுள்­ளது.


கடந்த ஆண்டு ஜூனில், 10 ஆயி­ரத்து, 603 கார்­கள் விற்­பனை ஆகி­யி­ருந்த நிலை­யில், இந்த ஆண்டு ஜூனில், 3,866 கார்­கள் மட்­டுமே விற்­பனை செய்­யப்­பட்­டி­ருந்­தன. இரு­சக்­கர
வாக­னத்தை பொறுத்­த­வரை, டி.வி.எஸ்., மோட்­டார் நிறு­வ­னம், 33 சத­வீ­தம் அள­வுக்­கும்; ஹீரோ மோட்­டோ­கார்ப் நிறு­வ­னம், 27 சத­வீ­தம் அள­வுக்­கும்சரி­வைக் கண்­டுள்­ளன.

மாறாக, எஸ்­கார்ட் நிறு­வ­னத்­தின், டிராக்­டர் விற்­பனை, 21.1 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. கடந்த ஆண்டு ஜூனில், 8,960 டிராக்­டர்­கள் விற்­பனை ஆகி­யி­ருந்த நிலை­யில், மதிப்­பீட்டு மாதத்­தில், 10 ஆயி­ரத்து, 851 வாக­னங்­கள் விற்­பனை ஆகி­யுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.இதே­போல், மகிந்­திரா அண்டு மகிந்­திரா நிறு­வ­னத்­தின் டிராக்­டர் விற்­ப­னை­யும், 10 சத­வீ­தம் அள­வுக்கு அதி­க­ரித்­துஉள்­ளது.


கடந்த ஆண்டு ஜூன் மாதத்­தில், 33 ஆயி­ரத்து, 94 டிராக்­டர்­கள் விற்­பனை ஆகி­யி­ருந்த நிலை­யில், நடப்புஆண்டு ஜூன் மாதத்­தில், 36 ஆயி­ரத்து, 544 டிராக்­டர்­கள் விற்­பனை
ஆகி­யுள்­ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)