பதிவு செய்த நாள்
22 ஜூலை2020
23:33

புதுடில்லி:மத்திய அரசின், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 1.27 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கான ஒப்புதலை, வங்கிகள் வழங்கி உள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துஉள்ளது.
மத்திய அரசு, 100 சதவீத அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக, 3 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி அறிவித்திருந்தது. கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட, பொருளாதார மந்தநிலை பாதிப்பிலிருந்து மீள்வதற்கு உதவும் வகையில், இந்த நிதி தொகுப்பை, மத்திய நிதியமைச்சகம் அறிவித்து இருந்தது.
தற்போது, இந்த திட்டத்தின் கீழ் இதுவரை, 1.27 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடன்களுக்கான ஒப்புதல், வங்கிகளால் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.இதில், கடந்த, 20ம் தேதி நிலவரப்படி, 77 ஆயிரத்து, 613 கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. இந்தத் தொகை, 12 பொதுத் துறை வங்கிகள், 22 தனியார் துறை வங்கிகள், 21 வங்கிகள் சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
இதில், பொதுத் துறை வங்கிகள் மூலம், 70 ஆயிரத்து, 895 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இதில், 45 ஆயிரத்து, 797 கோடி ரூபாய் அளவிலான கடன்கள், 20ம் தேதி வரை வழங்கப்பட்டு உள்ளன.தனியார் துறை வங்கிகள், 56 ஆயிரத்து, 688 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கி, 31 ஆயிரத்து, 815 கோடி ரூபாயை, நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளது.
கடந்த, 15ம் தேதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது, பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் சேர்ந்து, ஒப்புதல் வழங்கிய தொகை, 4,237 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. வழங்கப்பட்ட கடன், 9,302 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. எஸ்.பி.ஐ., வங்கி மட்டும், 20 ஆயிரத்து, 988 கோடி ரூபாய் அளவிலான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது; 14 ஆயிரத்து, 811 கோடி ரூபாயை வழங்கி இருக்கிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|