நிதி நெருக்கடியில் இந்திய குடும்பங்கள் நிதி நெருக்கடியில் இந்திய குடும்பங்கள் ...  நடப்பு நிதியாண்டில் பொருளாதார இழப்பு ரூ.18.44 லட்சம் கோடியாக இருக்கும் நடப்பு நிதியாண்டில் பொருளாதார இழப்பு ரூ.18.44 லட்சம் கோடியாக இருக்கும் ...
வருமான வரித்தாக்கல்: அவசிய தகவல்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2020
16:43

வருமான வரித்தாக்கலில், படிவங்கள் பயன்படுத்துவதில், ஆண்டுதோறும் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்படுகின்றன. தற்போது, ‘முகமற்ற வரி மதிப்பீடு’ (Faceless Assessment) முறை அமலில் இருப்பதால், வரித்தாக்கலில் ஏதேனும் தவறு அல்லது குறைபாடு நேர்ந்தால், நேரில் சென்று அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளிக்க வாய்ப்பு இல்லை.


ஆகவே, வருமான வரித்தாக்கலின் போது, உங்கள் வருமானம், ஐந்து வகை தலைப்புகளில் எந்த வகை என்பதை பொறுத்து, உங்களுக்கு உரிய படிவம் எது என்பதை தேர்ந்தெடுப்பதும், அதில் சரியான விவரங்கள் தருவதும் தான், வருமானவரித் துறையின் தேவையற்ற கேள்விகளை தவிர்க்கும். ரீபண்ட் இருந்தால், விரைவாக பெற உதவும். உங்களுக்கான விரிவான, தனிப்பட்ட விவரங்களை உங்கள் ஆடிட்டரிடம் கேட்டு பெறலாம்.வருமான வரி செலுத்துவோர், குறிப்பிட்ட தேதிக்குள், வருமான வரி கணக்கு தாக்கல் (கட்டாய தணிக்கை இல்லாதவர்களுக்கு 30 நவம்பர்) செய்யாவிட்டால், காலதாமதத்துக்கு 5,000 முதல், 10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த நேரிடலாம். வருமான வரித்தாக்கல் செய்வதற்கு, ஏழு படிவங்கள் உள்ளன.


படிவங்களும் பயன்பாடும்

ஐ.டி.ஆர். – 1:
இருப்பதிலேயே மிகவும் எளிமையான படிவம் இதுதான். மொத்த வருமானம், 50 லட்சம் வரை உள்ள தனிநபர் மற்றும் இந்து கூட்டுக் குடும்பமாக கூட்டாளிகளாக உள்ளவர்கள், சம்பளம் வாயிலான வருமானம், ஒரு சொந்த வீடு உடையவர், பிற இனங்கள் வாயிலாக வருமானம் பெறுவோர் மற்றும் எந்த நிறுவனத்திலும் இயக்குனராகவோ அல்லது பட்டியலிடப்படாத ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்யாதவர்களுக்கான படிவம் இது.

ஐ.டி.ஆர். – 2:
சம்பளம் வருமானம், ஒன்றுக்கு மேற்பட்ட வீடு உடையவர், பிற இனங்கள் வாயிலாக வருமானம் பெறுவோர், மொத்த வருமானம், 50 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள், ஏதேனும் நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ள தனி நபர்கள் மற்றும் பட்டியலிடப்படாத பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள்.

ஐ.டி.ஆர்.–3:

கூட்டாண்மை நபர்கள், வணிகம் ஒன்றில் தனி நபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பமாகக் கூட்டாளிகளாக உள்ளவர் அல்லது தொழில் முனைவோர், தொழில்முறை வருவாய் உள்ளவர்.


ஐ.டி.ஆர்.– 4 (சுகம்):
சஹாஜ் தாக்கல் செய்ய தகுதியுடையவர் மற்றும் தொழிலில் உத்தேச வருமானம் அறிவிப்பவர். ஐ.டி.ஆர். –5: கூட்டாண்மை நிறுவனங்கள், சங்கங்கள்.


ஐ.டி.ஆர். –6: வரிச்சட்டப்பிரிவு 11ன் கீழ் வரி விலக்கு கோராத நிறுவனங்கள்.

ஐ.டி.ஆர். –7: 139 (4A) அல்லது 139(4B) அல்லது 139(4C) அல்லது 139(4D) அல்லது 139(4E) அல்லது 139(4F) உள்ளிட்ட பிரிவுகளில் வரித் தாக்கல் செய்யும் அவசியம் இல்லாதவர்கள் / நிறுவனங்கள் / அறக்கட்டளைகள்.


புதிய மாற்றங்கள்
2019-–20ம் நிதியாண்டு, வருமான வரித்தாக்கலின்போது, வங்கிகளில் ஒரு கோடிக்குமேல் டிபாசிட் செய்துள்ளவர்கள், வெளிநாட்டு பயணங்களுக்கு, 2 லட்சத்துக்கு மேல் செலவு செய்தவர்கள், அந்த நிதியாண்டில் மின் கட்டணத்துக்காக, 1 லட்சம் செலவிட்டவர்களும், இனி ஐ.டி.ஆர்.-1 மற்றும் ஐ.டி.ஆர்.-4 உபயோகிக்கலாம். அதில், உங்கள் பாஸ்போர்ட் எண் தெரிவிக்க வேண்டும். தற்போது, ரீபண்ட் பெற பல வங்கி கணக்குகள் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படுகின்றன. இவை உட்பட பல புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

பிற மாற்றங்கள்
இந்த ஆண்டு வரித்தாக்கல் செய்வதற்கான தேதி, நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டாலும், உங்களது மொத்த அல்லது நிகர வரி செலுத்துதல், ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் இருந்தால், பிரிவு 234A-ன் கீழ் தாமத கட்டணமாக, மாதத்துக்கு ஒரு சதவீதம் செலுத்த வேண்டிவரும். இது, ஆகஸ்ட் 2020 முதல் நீங்கள் வரித்தாக்கல் செய்யும் வரை வசூலிக்கப்படும். ஒரு வரிதாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டால், அவர் ஐ.டி.ஆர்.- 2 ஐ பயன்படுத்தி தாக்கல் செய்ய வேண்டும், இதுவரை, பிரிவு 57(iv)ன் கீழ், 50 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்ட தொகைபோக மீதமுள்ள வருமானத்தை, பிற இனங்களில் இருந்து பெறப்பட்ட வருமானமாக அறிவித்து வந்தோம். புதிய ஐ.டி.ஆர்., படிவங்களில் மொத்தமாக பெறப்பட்ட வருமானம் மற்றும் விலக்குத் தொகையை தனித்தனியாக அறிவிக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய 10 தவறு:
*குறைபாடுள்ள படிவம் 26AS: படிவம் 26ASல் உள்ள குறைபாடுகளை வரிதாரர் தங்களது வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கு முன், வருமான வரி இணையதளத்தில் உள்ள படிவம், 26ASல் என்ன பதிவாகி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதில், வருமான வரிப் பிடித்தம், முன்கூட்டியே கட்டிய வரி, சுய மதிப்பீட்டு வரி என, மூன்றும் இருக்கும். இவை மூன்றில் ஏதேனும் ஒரு விவரம் பூர்த்தி செய்யாமல் இருந்தால், வரிதாரருக்கு அதற்குரிய வரவு கிடைக்காது. உதாரணமாக, உங்களுக்கு வருமான வரிப் பிடித்தம் செய்தவர், அதை வருமான வரி இலாகாவுக்கு செலுத்தாவிட்டாலோ, செலுத்திய பின் அதற்குரிய படிவம் தாக்கல் செய்யாவிட்டாலோ அல்லது தாக்கல் செய்யும்போது தவறு செய்திருந்தாலோ, அதற்குரிய வரவு, உங்கள் 26ASல் வந்து சேராது.


*தவறான தகவல்: வரி படிவங்களில், பெயர், வங்கிக் கணக்கு, IFSC குறியீடு, மற்றும் முகவரி சரியாக குறிப்பிடப்படாததால், ஏராளமான வரித் தாக்கல் கணக்கு ரத்து செய்யப்படுகிறது. இதனால், ரீபண்ட் ரத்தாக வாய்ப்பு உண்டு.

*வரியில்லா வருமானம்: வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, டிவிடண்ட், காப்பீட்டு பாலிசி முதிர்வு தொகை ஆகியவை, வருமான வரிக்கு உட்படாதவை. ஆனாலும், அவற்றின் விவரங்களை வரிக் கணக்கு தாக்கலில் குறிப்பிடப்பட வேண்டும்.

*வட்டி மறைக்காதீங்க: பலர், தங்கள் நிரந்தர வைப்புக்கான வட்டியை வருமான வரிக்கு உட்படுத்துவதில்லை. சேமிப்பு கணக்கில், 10 ஆயிரம் வரை பெறும் வட்டிக்கு மட்டும்தான் வரி விலக்கு. அதற்குமேல் பெறும் தொகைக்கு, உரிய வரியைக் கட்ட வேண்டும். மைனர் பெயரில் உள்ள டெபாசிட்டுக்கான வட்டியை, பெற்றோர் வருமானத்தோடு சேர்க்க வேண்டும்.


*சரியான படிவம்: சரியான படிவத்தை பூர்த்திசெய்து கொடுத்தால்தான், வரிப் படிவங்கள் சரியான முறையில் தாக்கல் செய்யப்பட்டதாக அர்த்தம்; இல்லையெனில் நிராகரிக்கப்படலாம்.


*கையெழுத்து அவசியம்: மின்னணு முறையில் தாக்கல் செய்தாலும், ஒப்புதல் படிவத்தை, 120 நாளுக்குள் கையெழுத்திட்டு சென்ட்ரலைஸ்டு பிராசசிங் சென்டருக்கு அனுப்ப வேண்டும். மின்னணு முறையில் அல்லது டிஜிட்டல் கையெழுத்திட்டும் ஒப்புதல் படிவம் தாக்கல் செய்யலாம்.


*சொத்து விவரம்: வருமான வரிச்சட்டத்தின்படி, வசிக்கும் ஒரு வீட்டுக்கு மட்டும்தான் வரி விலக்கு. மீதமுள்ள வீடுகளுக்கு, சந்தையில் உள்ள வாடகை வருமானம் அளவில், 30 சதவீதத்தை பராமரிப்பு செலவுக்காக கழித்துவிட்டு வரும் தொகைக்கு வரி கட்ட வேண்டும்.


*பழைய, புதிய வருமானம்: வேறு பணிக்கு மாறும் பணியாளர்கள், பழைய நிறுவனத்தில் பெற்ற வருமானம், புதிய நிறுவனத்தில் பெறும் வருமானம் இரண்டுக்கும் வரி கட்ட வேண்டும்.


*வெளிநாட்டு சொத்து: வெளிநாட்டு சொத்து/வருமானம் கொண்டுள்ள இந்திய குடிமகன் அதை இந்திய வருமான வரிச் சட்டப்படி வரி செலுத்த வேண்டும். மறைக்கப்படும் பட்சத்தில், வட்டி, அபராதத்துடன் சிறை தண்டனை உண்டு.

*காலகெடு: காலகெடுவுக்குள் வரித் தாக்கல் செய்வது, வீணாக வட்டி செலுத்துவதை தவிர்க்க உதவும். சிறிய கவனங்களை மேற்கொள்ளும் பட்சத்தில் பின்னாளில் வரக்கூடிய சிரமங்களைத் தவிர்க்க முடியும்.
ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன்

வாசக வணிகர்களே உங்கள் சந்தேகங்களை எழுத வேண்டிய இமெயில்: karthi@gkmtax.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)