பதிவு செய்த நாள்
16 செப்2020
21:39

திருப்பூர்:இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், இயல்பு நிலைக்கு திரும்பத் துவங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பால், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம்,கடும் வீழ்ச்சியை சந்தித்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வர்த்தகம், 90.16 சதவீதம் சரிவு கண்டது. மே மாதம், 63.34 சதவீதம் சரிந்தது. திருப்பூர் ஆடை ஏற்றுமதி துறையினர் கூறியதாவது:சீனாவுக்கு மட்டுமே ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் வழங்கி வந்த வர்த்தகர்கள், தற்போது, பிற நாடுகளுக்கும் பகிர்ந்தளிக்க துவங்கியுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும், வர்த்தக சரிவுநிலை, குறைந்து வருகிறது.ஆகஸ்ட் மாத ஏற்றுமதி வர்த்தகம், 9.74 சதவீதம் சரிவையே சந்தித்துள்ளது.பொதுப் போக்குவரத்து துவங்கியுள்ளதால், தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். ஆர்டர்கள் வரத் துவங்கியுள்ளன. இதனால், ஆடை உற்பத்தி வேகமெடுத்துள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் ஜவுளி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|