பதிவு செய்த நாள்
01 அக்2020
21:04

புதுடில்லி:நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, இரண்டாவது மாதமாக, செப்டம்பரிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும், எட்டரை ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியையும் எட்டிப் பிடித்துள்ளது. நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டிருந்த நிலையிலும், புதிய ஆர்டர்கள் வரத்து அதிகரித்த காரணத்தால், இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
’ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், செப்டம்பர் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ள தாவது:இந்தாண்டு, ஆகஸ்ட் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, ‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 52.0 புள்ளிகளாக இருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில், 56.8 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
இது, கடந்த, 2012 ஜனவரிக்கு பிறகான அதிகபட்ச வளர்ச்சியாகும். பி.எம்.ஐ., குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த குறியீடு, அதற்கு முன் தொடர்ந்து, 32 மாதங்களாக வளர்ச்சியை கண்டிருந்த நிலையில் முதன் முறையாக சரிவைக் கண்டது. இதற்கு நாடு முடக்கப்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.இந்நிலையில், ஆர்டர்கள் வரத்து அதிகரித்ததை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி நன்றாக அதிகரித்திருக்கிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|