பதிவு செய்த நாள்
09 அக்2020
21:57

சென்னை:மொபைல் போன் எண்ணிலிருந்து குறுந்தகவல் அனுப்பி, ‘ஜி.எஸ்.டி.,ஆர் -3பி நில் ரிட்டர்ன்’ தாக்கல் செய்யலாம் என, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரியில், மாதம் தோறும் ஜி.எஸ்.டி.ஆர்., 1 மற்றும் ஜி.எஸ்.டி.ஆர்.,- 3பி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.ஜி.எஸ்.டி.ஆர்., 3பி’யை பொறுத்தவரை, மாதம்தோறும், 20ம் தேதிக்குள், தாமதக் கட்டணம் இல்லாமல் தாக்கல் செய்யலாம்.தற்போது, கணக்கு தாக்கல் செய்ய, பில் ஏதும் இல்லாத நிலையில், மொபைல் போனில் குறுந்தகவல் வாயிலாக, ‘நில் ரிட்டர்ன்’ தாக்கல் செய்யலாம்.
இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் 3பி, மாதம் தோறும் செய்ய வேண்டும். ஒரு மாதத்தில் எந்த சேவையோ, விற்பனையோ இல்லை எனில், அந்த மாதத்திற்கு ‘நில் ரிட்டர்ன்’ தாக்கல் செய்ய வேண்டும். இதை, மொபைல் போனிலிருந்து குறுந்தகவல் அனுப்பி, தற்போது தாக்கல் செய்ய முடியும்.இதற்கு, சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, பதிவு செய்துள்ள நிறுவனத்தின், அதிகாரப்பூர்வ பதிவாளரின் மொபைல் எண், ஜி.எஸ்.டி., போர்ட்டலில் பதிவு செய்திருக்க வேண்டும்.முந்தைய காலங்களில், ஜி.எஸ்.டி., ஆர் 3பி தாக்கல் செய்திருக்க வேண்டும். எந்த வரியும் நிலுவையில் இருக்கக் கூடாது மற்றும் தாமதக் கட்டணமோ அல்லது வட்டியோ செலுத்தி இருக்கக் கூடாது. இந்த நிபந்தனைகளின் படி, மாதம் தோறும் குறுந்தகவல் அனுப்பி நில் ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|