உணவு வினியோக ‘ஆர்டர்’கள் அதிகரிப்பு உணவு வினியோக ‘ஆர்டர்’கள் அதிகரிப்பு ...  தேசமெங்கும் விரியும் இரும்புக் கரங்கள்! தேசமெங்கும் விரியும் இரும்புக் கரங்கள்! ...
தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி ஆகஸ்டில் 8 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2020
22:29

புதுடில்லி:நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 8 சதவீதம் சரிந்துள்ளது. இதற்கு, தயாரிப்புத் துறை, சுரங்கம், மின்சாரம் ஆகிய துறைகளில் உற்பத்தி குறைந்து போனது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இது குறித்து, மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியானது, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 8 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.இதுவே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 1.4 சதவீதம் சரிவைக் கண்டிருந்தது.


மதிப்பீட்டு மாதத்தில், தொழில் துறை உற்பத்தி குறியீட்டின் தரவுகள் அடிப்படையில் பார்க்கும்போது, தயாரிப்புத் துறையின் வளர்ச்சி, 8.6 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. இதேபோல், சுரங்கத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 9.8 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், மின்சாரத் துறை உற்பத்தியும், 1.8 சதவீதம் குறைந்துள்ளது.மூலதன பொருட்கள் உற்பத்தி வளர்ச்சியும், 15.4 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில், முதலில் அறிவிக்கப்பட்டிருந்த தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, மைனஸ், 10.4 என்பதிலிருந்து, மைனஸ், 10.8 சதவீதமாக திருத்தி அறிவிக்கப்படுகிறது. மே மாதத்திலும் சரிவு, 33.9 சதவீதம் என்பதிலிருந்து, 33.4 சதவீதமாக திருத்தி அறிவிக்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)