பதிவு செய்த நாள்
18 அக்2020
10:39

மத்திய, மாநில அரசுகள், ஆயிரக்கணக்கான மக்கள் நலத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது. நம்மில் பலருக்கு, அவை என்னென்ன? யார் பயன் பெற முடியும்? என்பதை நினைவு வைத்து கொள்ள இயலாது.அப்படியே வைத்து இருந்தாலும், அவற்றின் பலன்களை எப்படி பெறுவது, அதற்கு எப்படி விண்ணப்பிப்பது? என்பது ஒரு கேள்விக்குறி.
இவற்றை மனதில் வைத்து துவக்கப்பட்டது தான் ‘அக்தர்ஷக்’ என்ற ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம்.வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, அரசாங்கத்தின், இலவச ‘காஸ் கனெக் ஷன்’ திட்டம், கட்டுமான பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு கிடைக்கும் உதவி, தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் உதவி, பென்ஷன் உதவி, மளிகை கடை வைத்திருப்போருக்கு, கிடைக்கும் கடனுதவி திட்டம், எம்.எஸ்.எம்.இ., கம்பெனிக்கு கிடைக்கும் கடனுதவி திட்டம் என, பல திட்டங்கள் உள்ளன.பல பகுதியில் இருப்போரும் பயன்பெற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு, இந்த ‘ஸ்டார்ட் அப்-’ கிளைகளை பல ஊர்களில், அந்த ஊர்களில் இருக்கும் படித்து வேலை இல்லாத பெண்களை கொண்டு ஏற்படுத்தி உள்ளனர்.
இதனால், அந்த பெண்கள் உள்ளூரிலே மாதம், 6,000ம் முதல், 7,000ம் வரை வருமானம் ஈட்ட வழி வகுக்கிறது.இதுவரை மூன்று லட்சம் பேருக்கு அரசாங்கத்தின் திட்டங்களின் வாயிலாக, சுமார் நூறு கோடி ரூபாய் வரை கிடைக்க வழி வகை செய்திருக்கிறார்கள். தற்போது ஒரு மாதத்திற்கு, 65 ஆயிரம் விண்ணப்பம் வரை பூர்த்தி செய்து அனுப்புவதற்கு உதவுகின்றனர்.தற்போது, இந்த ‘ஸ்டார்ட் அப்’ மத்திய மற்றும் வட மாநிலங்களில் அதிகளவில் செயல்பட்டாலும், தமிழகத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனம் பற்றி, விவரம் அறிய-, https://haqdarshak.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இவர்கள், இந்தியாவின் பல பெரிய ‘கார்ப்பரேட்’ நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றி வருவது முக்கியமான அம்சம்.
– சேதுராமன் சாத்தப்பன் –
சந்தேகங்களுக்கு: sethuraman.sathappan@gmail.com,
www.startupand businessnews.com,
மொபைல் எண்: 98204–51259.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|