பதிவு செய்த நாள்
24 அக்2020
22:15

மும்பை,:அமெரிக்க கருவூலங்களில், இந்தியாவின் முதலீடு, இதுவரை இல்லாத வகையில், 200 பில்லியன் டாலரை நெருங்கி உள்ளது. இது இந்திய மதிப்பில், 14.80 லட்சம் கோடி ரூபாயாகும்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து, இந்தியா, அமெரிக்க கருவூலங்களில் தன் முதலீடுகளை அதிகரித்து வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் நிலவரப்படி, இது, 196. 5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதையடுத்து, சிங்கப்பூர், பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி, இந்தியா, 12வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்ட காலத்தில், இந்திய ரிசர்வ் வங்கி, 4,000 கோடி டாலர் மதிப்பிலான பத்திரங்களை வாங்கியது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதத்தில், ரிசர்வ் வங்கியின் அமெரிக்க கருவூல முதலீடு, 15 ஆயிரத்து, 650 கோடி டாலராக இருந்த நிலையில், 19 ஆயிரத்து, 650 கோடி டாலராக அதிகரித்தது.
இந்த முதலீடு, திடீரென ஏற்படும் நிச்சயமற்ற நிலைக்கு, ஒரு கேடயமாக இருக்கும். கொரோனா காலத்தில், தங்கத்தை அடுத்து, அமெரிக்க கருவூல முதலீடுகள் மிகவும் பாதுகாப்பானவை. இருப்பினும், முதலீட்டின் மீதான வருவாய் குறைவாகவே இருக்கும் என்கின்றனர், நிபுணர்கள்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|