பதிவு செய்த நாள்
24 அக்2020
22:19

புதுடில்லி:நிறுவனங்கள், டிஜிட்டல் மற்றும் தானியங்கி மயமாவதில், உலக சராசரிக்கும் அதிகமாக, இந்தியா முன்னேறி இருப்பதாக, உலக பொருளாதார மன்றம் அண்மையில் தெரிவித்துள்ளது.
நிறுவனங்கள் டிஜிட்டல் மற்றும் தானியங்கி மயமாவது, கொரோனா தாக்கத்தால் உலகளவில் எதிர்பார்ப்புக்கும் மேலாக வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், இந்திய நிறுவனங்கள், உலக சராசரிக்கும் மேலாக, முன்னேறி இருக்கின்றன.எதிர்காலத்தில், உலகளவில், 26 நாடுகளில், 15 துறைகளில், நிறுவனங்கள் தானியங்கி மயமாவதை அடுத்து, 8.5 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்நிலையும் கொரோனாவால் விரைவுபடுத்தப்பட்டிருப்பதாக, ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதே சமயம், இந்த தொழில்நுட்ப மாற்றங்களால், 8.7 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய வேலை வாய்ப்புகள், பெரும்பாலும், செயற்கை நுண்ணறிவு, கருத்துருவாக்கம் ஆகிய துறைகளில் ஏற்படும் என்றும் கருதப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை, இந்த தொழில்நுட்ப மாற்றங்கள், உலக சராசரியை விட அதிகமாக இருக்கிறது.உலகளவில், 50 சதவீத நிறுவனங்கள், பணிகளை தானியங்கி மயமாக்குவதை துரிதப்படுத்தும் நிலையில், இந்தியாவில் இது, 58 சதவீதமாக இருக்கிறது.
இதேபோல், உலகளவில், 80 சதவீத நிறுவனங்கள் பணிகளில் டிஜிட்டல்மயமாக்குவதை துரிதப்படுத்தும் நிலையில், இந்தியாவில் இது, 87 சதவீதமாக உள்ளது. இது, உலகளாவிய சராசரியான, 84 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது.இவ்வாறு, உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|