பதிவு செய்த நாள்
29 அக்2020
21:55

மும்பை:நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதியை, 2025ம் ஆண்டில், 5.18 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிப்பதற்கான பட்ஜெட் பரிந்துரையை, இத்துறையினர் வழங்கி உள்ளனர்.
வெட்டி, மெருகூட்டப்பட்ட வைரத்திற்கான இறக்குமதி வரியை, தற்போதைய, 7.5 சதவீதத்திலிருந்து, 2.5 சதவீதமாக குறைக்க வேண்டும் என, தங்கள் ஆலோசனையில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, இந்த துறைக்கான கூட்டமைப்பான, ஜி.ஜெ.இ.பி.சி., கூறியிருப்பதாவது:உலக சந்தையில், இந்தியாவின் வைர ஏற்றுமதி, கடந்த, 2001ல், 37 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இதுவே, கடந்த 2010ல், 1.63லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது.
இதன்மூலம், 2008ல், இஸ்ரேல் நாட்டை பின்னுக்கு தள்ளி, இந்தியா முன்னேறியது. இதன் தொடர்ச்சியாக, உலகின் மெருகூட்டப்பட்ட வைர ஏற்றுமதியில், இந்தியாவின் பங்கு, 27.28 சதவீதமாக அதிகரித்தது.தற்போது, 15 வைரங்களில், 14 வைரங்கள் இந்தியாவில் தயார் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கூடுதல் வளர்ச்சிக்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது.மேலும், கொரோனா காரணமாக, அனைத்து பரிவர்த்தனைகள் மற்றும் வைர வர்த்தகங்கள், மின்னணு வர்த்தகம் வழியாகவே நடைபெறுகின்றன. இந்நிலையில், மின்னணு வர்த்தகங்களுக்கு சமநிலை வர்த்தக வரியாக, 2 சதவீதம் விதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த, 2 சதவீத வரியும் சேர்ந்தால், மேலும் நிலைமை பாதிக்கப்படும். எங்கள் துறைக்கு இதை நீக்குமாறு, நிதியமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|