பதிவு செய்த நாள்
29 அக்2020
21:48

குவஹாத்தி:கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில், குவஹாத்தி தேயிலை ஏல மையமான, ஜி.டி.ஏ.சி., நேற்று சிறப்பு தேயிலையை, 1 கிலோவுக்கு, 75 ஆயிரம் ரூபாய் என, விற்பனை செய்துள்ளது. இந்த ஆண்டில் இதுதான் அதிகபட்ச விலையாகும்.
இது குறித்து, குவஹாத்தி தேயிலை ஏலம் வாங்குவோர் சங்கத்தின் செயலர் தினேஷ் பிஹானி கூறியதாவது:உலகளவில், கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது ஒரு பெரிய சாதனையாகும். மனோஹரி கோல்டு ஸ்பெஷாலிட்டி தேயிலை, 1 கிலோ, 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.
மனோஹரி தேயிலை எஸ்டேட், மிகுந்த கவனம் செலுத்தி, இந்த சிறப்பு தேயிலையை செப்டம்பரில் தயாரித்து, இந்த ஏல மையத்துக்கு அனுப்பியது. கடந்த ஆண்டு, இதே மனோஹரி தேயிலை தயாரிப்பு, 1 கிலோ, 50 ஆயிரம் ரூபாய் என ஏலம் போனது. தன்னுடைய சாதனையை இந்த ஆண்டு அதுவே முறியடித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில், அசாம் தேயிலையான, கோல்டன் பட்டர்பிளை தேயிலை, 75 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|