தொழிலாளர்களுக்கான பணவீக்கம் அக்டோபரில் சற்று அதிகரிப்பு தொழிலாளர்களுக்கான பணவீக்கம் அக்டோபரில் சற்று அதிகரிப்பு ... அரசின் தைரியமான சீர்திருத்தங்கள் பாராட்டிய முகேஷ் அம்பானி அரசின் தைரியமான சீர்திருத்தங்கள் பாராட்டிய முகேஷ் அம்பானி ...
வோடபோன் ஐடியா பங்கு விலை ஏற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2020
22:42

மும்பை:பார்தி இன்ப்ராடெல் மற்றும் இண்டஸ் டவர்ஸ் நிறுவனங்கள் இணைந்து, மிகப்பெரிய செல்போன் டவர் கம்பெனியை உருவாக்க உள்ளன. இந்த இணைப்பை அடுத்து, வோடபோன் ஐடியா, பார்தி இன்ப்ராடெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை, நேற்று அதிகரித்தது.

இண்டஸ் நிறுவனத்தில், வோடபோனுக்கு, 11.15 சதவீத பங்குகள் இருப்பதால், இந்த இணைப்பால் அதற்கு, 3,760 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.புதிய டவர் நிறுவனத்தில், வோடபோனுக்கு, 28.12 சதவீத பங்குகளும், பார்தி ஏர்டெல் குழுமத்துக்கு, 36.7 சதவீத பங்குகளும் உள்ளன.இத்தகைய காரணத்தினால், இவற்றின் பங்குகள் விலை நேற்று உயர்வை கண்டது.


வோடபோன் நிறுவன பங்குகள் விலை, 8.31 சதவீதமும், பார்தி இன்ப்ராடெல் பங்குகள் விலை, 19.26 சதவீதமும் அதிகரித்தன. கடந்த வியாழக்கிழமை அன்று சந்தைகள் சரிவைக் கண்ட நிலையில் நேற்று மீண்டும் உயர்ந்தன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்று, 282.29 புள்ளிகள் அதிகரித்து, 43,882.25 புள்ளிகளாக உயர்ந்தது.

இதேபோல் தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 87.35 புள்ளிகள் அதிகரித்து, 12,859.05 புள்ளிகளாக உயர்ந்தது.சென்செக்ஸ் குறியீட்டில் அதிகபட்சமாக பஜாஜ் பின்சர்வ், 9 சதவீத விலை உயர்வை கண்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:தங்க ஆபரணங்கள் தேவை, நடப்பு நிதியாண்டில், 35 சதவீதம் குறையும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ ... மேலும்
business news
புதுடில்லி:அன்னிய நேரடி முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவது, நாட்டின் முதலீடு செய்வதற்கு உரிய சாதகமான ... மேலும்
business news
புதுடில்லி:அமேசான் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் போதாது; அதன் விற்பனைக்கு, 7 நாட்கள் ... மேலும்
business news
புதுடில்லி:பார்தி ஏ.எக்ஸ்.ஏ., ஜெனரல் நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு நிறுவனத்துடன் இணைவதற்கு, அனுமதியை, ... மேலும்
business news
புதுடில்லி:‘ருச்சி சோயா’ நிறுவனத்தை,‘பதஞ்சலி’ கையகப்படுத்திய நிலையில், அதன் நிர்வாகக் குழுவில், பாபா ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)