பதிவு செய்த நாள்
25 நவ2020
22:52

புதுடில்லி:மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, மெய்நிகர் நாணயமான, ‘பிட்காய்ன்’ மதிப்பு, மீண்டும், 19 ஆயிரம் டாலரை, அதாவது கிட்டத்தட்ட, 14.06 லட்சம் ரூபாயை தாண்டி உள்ளது. நேற்றைய தினம் இதன் மதிப்பு, 13.97 லட்சம் ரூபாயாக இருந்தது.
இதற்கு முன், கடந்த, 2017ம் ஆண்டு டிசம்பரில், ஒரு பிட்காய்ன் மதிப்பு, 19 ஆயிரத்து, 666 டாலராக இருந்தது. அதன் பிறகு, கடந்த செவ்வாய் அன்று, முதன் முறையாக, 19 ஆயிரத்து, 225 டாலரை தொட்டது.கொரோனாவை தடுப்பதற்கான ஊக்கச் சலுகைகள், பணவீக்கத்தை சமாளிக்கும் வகையிலான முதலீட்டுக்கான மாற்று ஆகிய காரணங்களால், பிட்காய்ன் முதலீடுகள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இன்னும் ஓராண்டில், பிட்காய்ன் மதிப்பு, 1 லட்சம் டாலராக உச்சம் தொடும் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். அதாவது, ஒரு பிட்காய்ன் மதிப்பு, இன்றைய தேதி மதிப்பின்படி,
74 லட்சம் ரூபாயாக உயரும் என்கிறார்கள்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|