பதிவு செய்த நாள்
29 நவ2020
22:15

கொரோனா பாதிப்பு சூழலில், வீட்டிலிருந்தே பணி புரிவது இயல்பாகி உள்ள நிலையில், பலரும் நகருக்கு வெளியே வீடுகளை நாடத் துவங்கியுள்ளனர். மேலும், பெரிய அளவிலான வீடுகளையும் விரும்புகின்றனர். இதற்கு மனை வாங்கி வீடு கட்டுவது ஏற்றதாக இருக்கிறது. இதன் காரணமாக, சென்னை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில், வீட்டு மனைகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. வீட்டு மனை வாங்குவதில் உள்ள சாதக, பாதக அம்சங்களை தெரிந்து கொள்வது நல்லது.
அதிக வசதி:
அடுக்குமாடி குடியிருப்புகளை விட, மனை வாங்கி வீடு கட்டும் போது, நம் விருப்பத்தின்படி வீட்டை அமைத்துக் கொள்ளலாம்; தேவைக்கேற்ப மாற்றங்களை செய்து கொள்வதும் எளிது. பணிகள் தாமதமாகி, வீடு ஒப்படைக்கப்படுவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் இல்லை. கையில் இருக்கும் நிதிக்கு ஏற்ப கட்டிக் கொள்ளலாம்.
உயரும் மதிப்பு:
வீட்டு மனைகளின் மதிப்பு காலப்போக்கில் உயரும் தன்மை கொண்டது. முதலீடு நோக்கில் பார்த்தால், அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை விட, வீட்டு மனை அதிக பலன் தரக்கூடியது. அடுக்குமாடி குடியிருப்புகள் பல ஆண்டுகளுக்கு பிறகு தேய்மானத்தை சந்திக்கும். விற்க விரும்பினால், உடனடியாக விற்பது கடினமாகலாம்.
நிதி ஆதாரம்:
அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவது எனில், வீட்டுக்கடன் எளிதாக கிடைக்கும் என்பதால் நிதி திரட்டுவது பிரச்னையாக இருக்காது. வீட்டு மனை வாங்க கடன் கிடைக்கும் என்றாலும், வாய்ப்புகள் குறைவு. மேலும், மனை மதிப்பிற்கு ஏற்ப கடன் கிடைக்காது. கையில் இருந்து கணிசமாக பணம் போட வேண்டும்.
வரி சலுகை:
மனை வாங்க வங்கிக் கடன் வாங்கினால், அதன் மீது வரிச் சலுகை கோர முடியாது. மனையில் வீடு கட்ட கடன் வாங்கினால் வரிச் சலுகை பொருந்தும் என்றாலும், வீடு கட்டி முடிக்கப்பட்ட பின் தான் இதை பெற முடியும். வீட்டுக்கடன் எனில், வருமான வரிச் சலுகை கோர முடியும்.
பத்திர விபரங்கள்:
சொந்த வீடு வாங்குவது போலவே, மனை வாங்கும் போதும், பத்திர விபரங்களில் கவனமாக இருக்க வேண்டும். வாங்க இருக்கும் மனை தொடர்பான பத்திர விபரங்களை சட்டரீதியாக பரிசீலிக்க வேண்டும். பல்வேறு வகையான அனுமதிகள் தொடர்பாகவும் கவனிக்க வேண்டும்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|