பதிவு செய்த நாள்
03 டிச2020
21:21

புதுடில்லி:‘ஐ.எச்.எஸ்., மார்க்கிட்’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த நவம்பரில், சேவைகள் துறையின் வளர்ச்சியை
குறிக்கும், ‘ஐ.எச்.எஸ்., மார்க்கிட் எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு, 53.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, அக்டோபரில், 54.1 புள்ளிகளாக அதிகரித்திருந்தது.இருப்பினும், கொரோனா
பாதிப்புகளுக்குப் பின், தொடர்ந்து, இரண்டாவது மாதமாக வளர்ச்சி காணப்பட்டுள்ளது.
50 புள்ளிகளுக்கு மேல் இருப்பின், அது வளர்ச்சி என்று எடுத்துக்கொள்ளப்படும்.
வேலை வாய்ப்பை பொறுத்தவரை, நவம்பர் மாதத்தில், சேவைகள் துறையில், அதிகமான பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த எட்டு மாதங்களாக, வேலைவாய்ப்புகள்
குறைந்திருந்தன.அடுத்த, 12 மாதங்களில், வணிக நடவடிக்கைகள் உயரும் என்ற நம்பிக்கையை, சேவைகள் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் வெளிப்படுத்தி உள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|