பதிவு செய்த நாள்
10 டிச2020
21:23

நியூயார்க்:கொரோனா காலத்தில், அமெரிக்காவிலுள்ள பெரும் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு, கணிசமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்ற குரல்களும் எழத் துவங்கி உள்ளன.
கொரோனா துவங்கியதிலிருந்து, அமெரிக்காவின் மிகப் பெரிய செல்வந்தர்களுடைய சொத்து மதிப்பு, 78 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துவிட்டதாக, ஏ.டி.எப்., எனும் அமைப்பின் ஆய்வறிக்கை கூறியுள்ளது.நாட்டிலுள்ள, 651 செல்வந்தர்களின் மொத்த சொத்து மதிப்பு, கடந்த மார்ச் மாதத்தில், 218.3 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், கடந்த, 7ம் தேதி நிலவரப்படி, 296.74 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது போன்று, வெகு சிலரிடம் மட்டும் சொத்து குவிந்திருப்பது, இதற்கு முன் அமெரிக்கா கண்டிராததாகும் என்றும், ஆய்வறிக்கை குறிப்பிட்டு உள்ளது.இந்நிலையில், செல்வந்தர்களிடம் குவிந்த, 78 லட்சம் கோடி ரூபாயை, 30 கோடி அமெரிக்கர்களுக்கு, தலா 3 ஆயிரம் டாலர் வீதம், நிதிச் சலுகையாக, தாராளமாக வழங்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|