‘பேடிஎம் பேமென்ட்ஸ்’ பேங்க் மீண்டும் ஒரு சாதனை‘பேடிஎம் பேமென்ட்ஸ்’ பேங்க் மீண்டும் ஒரு சாதனை ...  கை நிறைய பணத்துடன்  காத்திருக்கும் சீன நிறுவனங்கள் கை நிறைய பணத்துடன் காத்திருக்கும் சீன நிறுவனங்கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘அடுத்த இலக்கு தமிழகம் தான்!’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2020
09:25

நாட்­டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்­கி­களில் ஒன்று, பேங்க் ஆப் மஹா­ராஷ்­டிரா. கிட்­டத்­தட்ட, 1,900 கிளை­கள் மற்­றும் ஒன்­றரை கோடி வாடிக்­கை­யா­ளர்­க­ளைக் கொண்­டது இந்த வங்கி. தற்­போது தன் அடுத்­த­கட்ட வளர்ச்­சிக்கு, தமி­ழ­கத்­தின் மீது பார்­வை­யைத் திருப்­பி­யுள்­ளது. இது தொடர்­பாக, இவ்­வங்­கி­யின் நிர்­வாக இயக்­கு­ன­ரும், தலை­மைச் செயல் அதி­கா­ரி­யு­மான ஏ.எஸ்.ராஜீவ் அளித்­துள்ள சிறப்பு பேட்டி:

கொரோனா காலத்­தி­லும் கூட, உங்­கள் வங்கி அதிக லாபம் கண்­டி­ருக்­கி­றதே, எப்­படி?
நாங்­கள் வழங்­கிய கட­னு­த­வி­யின் மதிப்பு, 13 – 14 சத­வீ­தம் அதி­க­ரித்­த­தால், அதற்­கேற்ப எங்­க­ளது வரு­மா­ன­மும் அதி­க­ரித்­தது. மேலும், வட்டி வரு­மா­ன­மும் உயர்ந்­த­தால், லாப­மும் அதி­க­ரித்­துள்­ளது. மாறும் வட்டி விகி­தங்­களை சமா­ளிக்க, உச்ச நீதி­மன்ற உத்­த­ர­வுப்­படி, 300 கோடி ரூபாயை தனி­யாக ஒதுக்கி வைக்க வேண்­டி­ய­தி­ருந்­தது. இல்­லா­விட்­டால், லாபம் மேலும் அதி­க­ரித்­தி­ருக்­கும்.


தமி­ழ­கத்­தில் நிறைய கிளை­களை துவக்க இருப்­ப­தா­கச் சொல்­லப்­ப­டு­கி­றதே?

ஆமாம். வரும் மார்ச் மாத இறு­திக்­குள், நாடு முழு­தி­லு­மாக, 150 புதிய கிளை­க­ளைத் திறக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளோம். அதில், 20 புதிய கிளை­கள், தமி­ழ­கத்­தில் திறக்­கப்­பட உள்­ளன.தமி­ழ­கத்­தின் பொரு­ளா­தார வளர்ச்சி சிறப்­பாக இருக்­கிறது. அத்­து­டன், வாராக் கடன் விகி­த­மும் குறை­வா­கவே இருக்­கிறது. இவை அனைத்­தும் தான், தமி­ழ­கத்­தின் பக்­கம் எங்­க­ளது கவ­னத்தை ஈர்த்­துள்­ளன. நீங்­கள் இந்­தச் செய்­தி­யைப் படித்­துக் கொண்­டி­ருக்­கும்­போது, ங்­கல்­பட்டு, தேனி, திண்­டுக்­கல் ஆகிய மூன்று இடங்­களில், எங்­க­ளது புதிய கிளை­கள் திறக்­கப்­பட்­டி­ருக்­கும். தர்­ம­புரி, நாகை, புதுக்­கோட்டை, ராமேஸ்­வ­ரம், விழுப்­பு­ரம், மார்த்­தாண்­டம் உள்­ளிட்ட மேலும் பல இடங்­க­ளி­லும், புதிய கிளை­கள் திறக்­கப்­பட உள்­ளன.தமி­ழ­கத்­தில் தற்­போது, 30 கிளை­கள் உள்­ளன. அடுத்த இரண்டு அல்­லது மூன்று ஆண்­டு­க­ளுக்­குள், தமி­ழ­கத்­தில் எங்­க­ளது மொத்­தக் கிளை­க­ளின் எண்­ணிக்­கையை, 100 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்­துஉள்­ளோம்.

பழைய வாடிக்­கை­யா­ளர்­களை மீண்­டும் ஈர்க்­கும் வகை­யில், ‘கர் வாப்ஸி’ எனும், ‘தாய் வீடு திரும்­பு­தல்’ திட்­டத்தை கொண்டு வந்­தீர்­களே; அது வெற்றி பெற்­றுள்­ளதா?
இந்த திட்­டத்தை, எட்டு மாதங்­க­ளுக்கு முன் அறி­மு­கம் செய்­தோம். வங்­கி­யின் சிறப்­புக் குழு உறுப்­பி­னர்­கள், வெளி­யே­றிய ஒவ்­வொரு வாடிக்­கை­யா­ளர்­க­ளை­யும், அவர்­க­ளது இடத்­துக்கே சென்று பேசி, குறை­க­ளைக் கண்­ட­றிந்து, மீண்­டும் எங்­கள் வங்­கிக்கு வர­வ­ழைத்­த­னர். இந்த முயற்­சி­யால், இது­வரை மூன்று லட்­சம் வாடிக்­கை­யா­ளர்­கள் மீண்­டும் திரும்பி உள்­ள­னர். இதன் மூல­மாக இது­வரை, 1,500 கோடி ரூபாய் வணி­க­மும் கிடைத்­துள்­ளது. மார்ச் மாதத்­துக்­குள் மேலும், 500 கோடி ரூபாய் வணி­கம் கிடைக்­கும் என எதிர்­பார்க்­கி­றோம்.


இது போல, வேறு ஏதே­னும் சிறப்­புத் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளீர்­களா?
ஆமாம். மஹா­ராஷ்­டி­ரா­வில் விவ­சா­யி­கள் தற்­கொலை செய்து கொள்­வதை தடுக்­கும் வகை­யில், ஒரு சிறப்பு திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­தி­னோம். தற்­கொலை மனோ­பா­வம் கொண்­டி­ருந்த, 1,600 விளிம்பு நிலை விவ­சா­யி­களை சந்­தித்து, தகுந்த ஆலோ­ச­னை­களை வழங்­கி­னோம். அத்­து­டன், அவர்­களில் பல­ருக்கு கால்­நடை வளர்ப்பு, சிறு­தொ­ழில் பயிற்சி உள்­ளிட்ட மாற்று வரு­மான வழி­மு­றை­க­ளை­யும் ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தோம்.


உங்­கள் வங்கி, வாராக் கடன் பிரச்­னை­யி­லி­ருந்து மீண்­டது எப்­படி?
சில ஆண்­டு­க­ளுக்கு முன், மற்ற வங்­கி­க­ளைப் போலவே, எங்­கள் வங்­கிக்­கும் வாராக்­க­டன் பிரச்னை இருந்­தது. இதை சரி­கட்­டு­வ­தற்­காக, வாராக் கடன்­க­ளுக்கு ஈடான, நிதி ஒதுக்­கீடு விகி­தத்தை, 87.5 சத­வீ­த­மாக வைத்­தி­ருந்­தோம். மேலும், தீவிர முயற்­சி­க­ளால், 22 சத­வீத வாராக் கடன்­களை மீட்­டுள்­ளோம். இத­னால், வாராக் கடன் விகி­தம் வெகு­வா­கக் குறைந்து வரு­கிறது. மார்ச் மாதத்­துக்­குள் நிகர வாராக் கடன் விகி­தம், 3 சத­வீ­தத்­துக்­கும் கீழ் குறை­யும் என்று எதிர்­பார்க்­கி­றோம்.


மத்­திய அர­சின் வசம் இருக்­கும் பொதுத் துறை வங்­கி­க­ளின் பங்­கு­களை விற்­பனை செய்­வ­தற்­காக, ‘நிடி ஆயோக்’ வழங்­கி­யுள்ள பரிந்­து­ரை­யில் பேங்க் ஆப் மஹா­ராஷ்­டி­ரா­வின் பெய­ரும் இடம் ­பெற்­றுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றதே?

ஆமாம். இது குறித்து ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­கிறது. பரிந்­து­ரை­யின் மீதான இறுதி முடிவை, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் தான் எடுக்­கும்.தற்­போது, பேங்க் ஆப் மஹா­ராஷ்­டி­ரா­வில், 94 சத­வீத பங்­கு­களை மத்­திய அரசு வைத்­து உள்­ளது.‘செபி’ அமைப்­பின் நெறி­மு­றைப்­படி, எந்­த­வொரு பொதுத் துறை வங்­கி­யி­லும், மத்­திய அரசு அதி­க­பட்­சம், 75 சத­வீத பங்­கு­களை மட்­டுமே வைத்­தி­ருக்க முடி­யும். அதன்­படி, பேங்க் ஆப் மஹா­ராஷ்­டி­ரா­வில், மத்­திய அரசு வைத்­துள்ள பங்­கு­களில், 20 சத­வீ­தத்­துக்­கும் மேற்­பட்ட பங்­கு­கள், விற்­ப­னைக்கு வர­வுள்­ளன. இதில், அடுத்த ஆண்­டுக்­குள் குறைந்­த­பட்­சம், 10 சத­வீத பங்­கு­கள் விற்­ப­னைக்கு வரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இதை, சாதா­ரண முத­லீட்­டா­ளர்­கள் தங்­க­ளுக்­கான வாய்ப்­பாக பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம். ஏனெ­னில், பொதுத் துறை வங்­கி­க­ளைப் பொறுத்­த­வரை, மோச­மான நிலைமை முடி­வுக்கு வந்­து­விட்­டது. இனி வளர்ச்­சிப் பாதை தான்.



ஒரு வங்­கி­யா­ளர் என்ற முறை­யில், நாட்­டின் பொரு­ளா­தார நிலைமை தற்­போது எப்­படி இருப்­ப­தாக கரு­து­கி­றீர்­கள்?
கொரோனா பர­வல், சர்­வ­தேச பொரு­ளா­தார நிலைமை உள்­ளிட்ட பல்­வேறு கார­ணி­க­ளால், பொரு­ளா­தார வளர்ச்சி, எதிர்­மறை போக்­கில் உள்­ளது. ஆனால், இந்த நிலைமை மாறி வரு­கிறது. 2021 ஜூன் மாத இறு­தி­யில், பொரு­ளா­தார வளர்ச்சி விகி­தம், இரட்டை இலக்கை எட்ட வாய்ப்­பு­கள் உள்­ளன.எந்­த­வொரு நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கும், வங்­கி­கள் தான் துாண்டு­கோ­லாக உள்­ளன. ஆகை­யால், நம் நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யி­லும், வங்­கி­களில் குறிப்­பாக, பொதுத் துறை வங்­கி­க­ளின் பங்­க­ளிப்பு மிக அதி­க­மாக இருக்­கும். வங்­கித் துறைக்கு விரை­வில் கூடு­த­லாக, 3 – 4 லட்­சம் கோடி ரூபாய் மூல­த­னம் கிடைக்க உள்­ளது. இது, பணச் சுழற்­சியை அதி­கப்­ப­டுத்தி, பொரு­ளா­தார வளர்ச்­சி­யைத் துாண்டி­வி­டும் என்­ப­தால், இரட்டை இலக்­கப் பொரு­ளா­தார வளர்ச்சி சாத்­தி­யமே!
– நமது நிருபர் –

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)