பங்குகளை அரசு குறைக்க வேண்டும் பங்குகளை அரசு குறைக்க வேண்டும் ...  ‘டெஸ்லா’வை கிடுகிடுக்க வைத்த சாதாரண மின்னணு பொறியாளர் ‘டெஸ்லா’வை கிடுகிடுக்க வைத்த சாதாரண மின்னணு பொறியாளர் ...
இந்தியா முழுவதும் பல்வேறு சலுகைகளுடன் ஓபோ ரெனொ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை ஆரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2021
14:36

முன்னணி பன்னாட்டு ஸ்மார்ட் கருவி பிராண்டான ஓபோ நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகங்களான வீடியோகிராபி எக்ஸ்பர்டான ஒபோ ரெனோ 5 பிரோ 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் நாய்ஸ் கேன்சலிங் இயர்போன்ஸ் ஆகியவற்றின் விற்பனை தொடங்கியுள்ளது.

ஆஸ்ட்ரல் ப்ளூ மற்றும் ஸ்டாரி பிளாக் ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கும் ஒபோ ரெனோ 5 பிரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவின் முதல்மீடியாடெக் டைமென்சிட்டி 1000+ சிப்செட் மற்றும் தொழிற் துறையிலேயே முதன் முதலான ஏஐ ஹைலைட் வீடியோ தொழில்நுட்பத்தில் இயங்கும். ஒபோ ரெனோ 5 பிரோ 5ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ 35,990/-. டைனாடியோ வழங்கும் ஆடியோ டியூனிங்கில் இயங்கும் என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் நாய்ஸ் கேன்சலிங் இயர்போன்ஸ் ரூ 9,990/- விலையில் பிளாக் மற்றும் வைட் ஆகிய இரு அசத்தல் வண்ணங்களில் கிடைக்கும்.

புத்தம் புதிய ஒபோ ரெனோ 5 பிரோ 5ஜி ஸ்மார்ட்போன் கேஷ்பேக் சலுகைகள், எக்ஸ்செஞ்ச் போனஸ், நோ-காஸ்ட் இஎம்ஐ, கம்ப்ளீட் டேமேஜ் ப்ரொடெக்ஷன் உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களில் கிடைக்கும். வங்கி சிசி /டிசி இஎம்ஐ பரிமாற்றங்கள் மற்றும் 12 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ சலுகைகளுடன் ப்ளிப்கார்ட் வழியே ஆன்லைனில் வாங்கும் வாடிக்கையளர்களுக்கு ரூ 3500/- வரை 10% கேஷ்பேக் கிடைக்கும். மேலும் என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் நாய்ஸ் கேன்சலிங் இயர்போன்களைஆன்லைன் மற்றும் ஆப்லைனில் வாங்குவோருக்கு ரூ 1000/- சலுகை கிடைக்கும்.

கூடுதலாக ஓபோ இந்தியா 12 மாதங்களுக்குக் 120 ஜிபி க்ளௌட் ஸ்டோரேஜ் இடத்தை வாங்கும் தேதி தொடங்கி வழங்கும். இந்த ப்ரீ ஸ்டோரேஜை 12 மாதங்களுக்குப் பெயிட் ஸ்டோரேஜுடன் இணைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். நுகர்வோர்க்கு ப்ரீ ஸ்டோரேஜ் கிடைத்த பிறகு க்ளௌட் சேவை செயல்படத் தொடங்கும்.

ரெனோ வரிசையின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஒபோ ரெனோ 5 பிரோ 5ஜி பயனீட்டாளர்களுக்கு ‘லிவ் தி இன்பினைட்’ ஆற்றலைத் தரும். இந்தியாவின் முதல் மீடியாடெக் டைமென்சிட்டி 1000+ சிப்செட் தொழிற்துறையின் முதல் ஏஐ ஹைலைட் வீடியோ தொழிற்துறையின் முதல் ரெனோ க்ளோ டிசைன், 3டி பார்டர்லெஸ் சென்ஸ் ஸ்கிரீன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன், ஒரு பேனாவின் தடிமனுக்கு இணையான அல்ட்ரா ஸ்லிம் வடிவமைப்பு, 7.6 எம்எம் தடிமன், 173 கிராம் டை கொண்டது கொண்டது இக்கருவி. மேலும் ஒபோ ரெனோ 5 பிரோ 5ஜியிலுள்ள 4350எம்ஏஹெச் மின்கலன், 65வாட் சூப்பர் விஒஒசி 2.0 ப்ளாஷ் சார்ஜ் அதிகபட்சம் 30 நிமிடங்களில் 100% சார்ஜ் செய்வதுடன், 5 நிமிட சார்ஜில் 4 மணி நேர வீடியோ ப்ளேபேக்கையும் வழங்கும்.

என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் நாய்ஸ் கேன்சலிங் இயர்போன்ஸ் விற்பனை மூலம் தொடர்கிறது. டிபிஇஇ 3.0 சவுண்ட் சிஸ்டம் மற்றும் எல் ஹச் டி சி வயர்லெஸ் டிரான்ஸ்மிசன் தொழில்நுட்பத்துடன் இணைந்த பிரிமியம் டிடபிள்யுஎஸ் ஆதரவில் என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் நாய்ஸ் கேன்சலிங் இயர்போன்ஸ் இயங்குகின்றன. இது ஓபோவின் பாரம்பரியப் பெருமை பெற்ற ஆடியோ தொழில்நுட்பம் மற்றும் ஐரோப்பிய ஆடியோ நிறுவனமான புகழ் பெற்ற டைனாடியோ நிபுணத்துவத்துவம் ஆகியவற்றின் இணைந்த கருவியாகும். இந்த இயர்போன்கள் டூயல் - கோர் ப்ளூடூத் நாய்ஸ் ரிடக்‌ஷன் சிப் தொழில்நுட்பத்தில் இயங்கி உயர்தர ஹைபிரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேசன் வழங்கும், என்று ஓபோ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)