பதிவு செய்த நாள்
24 ஜன2021
21:57

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எப்., மற்றும் பொது வருங்கால வைப்பு நிதியான பி.பி.எப்., ஆகிய திட்டங்கள் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், இதே பிரிவில் வரும், வி.பி.எப்., திட்டம் பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது. பி.எப்., திட்டத்துடன் தொடர்பு கொண்ட இந்த வசதி, வரி சேமிப்பில் கைக்கொடுக்கும் என்பதோடு, ஓய்வு காலத்திற்கான திட்டமிடலும் உதவியாக இருக்கும். மாத சம்பளம் பெறுபவர்கள் இந்த வசதியை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.
தன்னார்வ திட்டம்:
பி.எப்., திட்டத்தின் கீழ், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மாதந்தோறும் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதே அளவு தொகையை நிறுவனமும் செலுத்துகிறது. இது தவிர, ஊழியர்கள் விரும்பினால், தாங்கள் செலுத்தும் தொகையை அதிகரிக்கலாம். இப்படி தன்னார்வமாக செலுத்தும் வசதியே வி.பி.எப்., ஆக அமைகிறது.
என்ன பலன்?
ஊழியர்களின் ஓய்வுகாலத்திற்கு பாதுகாப்பு அளிப்பதே பி.எப்., திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தின் கீழ் சேரும் தொகைக்கு கூட்டு வட்டி அடிப்படையில் கணக்கிடப்படுவதால் நீண்ட கால நோக்கில் பலன் அளிக்க கூடியது. மேலும், பி.எப்., பங்களிப்புக்கு வரிச்சலுகை உண்டு. முதிர்வு தொகைக்கும் வரி கிடையாது.
கூடுதல் பலன்:
உறுப்பினர்கள் விரும்பினால், வி.பி.எப்., மூலம் தாங்கள் செலுத்தும் தொகையை அதிகரித்துக் கொள்ளலாம், எனினும், இதற்கு நிறுவன பங்களிப்பு பொருந்தாது என்றாலும், பி.எப்.,திட்ட வட்டி இதற்கும் பொருந்தும். எனவே, இதில் கூடுதலாக செலுத்தி வரிச்சலுகை பெறலாம் என்பதோடு, ஓய்வு கால தொகையும் அதிகரிக்கும்.
எப்படி துவக்குவது?
தற்போதைய நிலையில், வைப்பு நிதி உள்ளிட்ட கடன்சார் முதலீடுகளை விட, பி.எப்., வட்டி விகித பலன் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் வரிச்சலுகையும் அளிக்கிறது. எனவே, வி.பி.எப்., மூலமான பங்களிப்பு நல்ல பலன் அளிக்கும். நிறுவனம் மூலம் இதற்கான வசதியை கோரலாம்.
ஆன்லைன்:
நிறுவனங்கள், ‘ஆன்லைன்’ மூலமும் தன்னார்வ பங்களிப்பு செலுத்த வழி செய்கின்றன. தன்னார்வ வசதி என்பதால், இதற்கான தொகையை தேர்வு செய்து கொள்வதோடு, விரும்பிய போது, அதிகமாக்க அல்லது குறைக்கவும் செய்யலாம். பி.எப்., விலக்கலுக்கான விதிகள் இதற்கும் பொருந்தும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|