பதிவு செய்த நாள்
30 ஜன2021
21:42

புதுடில்லி:ஓட்டுனர்கள் தேவைப்படாத, தானியங்கி கார்கள் விலை, தற்போதைய கார்களின் விலையை விட குறைவாக இருக்கும் என, ‘சாப்ட்பேங்க்’ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி மசயோஷி சன் கூறியுள்ளார்.
உலக பொருளாதார மன்றத்தின், டாவோஸ் மாநாட்டில், காணொலி மூலம் பங்கேற்று பேசிய அவர் கூறியதாவது:கொரோனா சூழ்நிலை துயரமான ஒன்று எனினும், அதனால் தொழில்நுட்பமானது வேகமாக வளர்ந்துள்ளது.உதாரணமாக, காணொலி சந்திப்புகள் ஏற்றம் பெற்றுள்ளன. அதைப் போலவே, கல்விக்கான தொழில்நுட்பம், ஓட்டுனர் தேவைப்படாத தானியங்கி வாகனங்கள் ஆகியவற்றிலும் மேம்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இன்னும் இரண்டு ஆண்டுகளில், தானியங்கி கார்கள் பெருமளவில் தயாரிக்கப்படும். இதன்பிறகு, இக்கார்களின் விலை, வழக்கமான கார்களின் விலையை விட குறைவாக இருக்கும்.தொழில்நுட்ப புரட்சிகளை நம்மால் நிறுத்தவோ, அதன் வேகத்தை குறைக்கவோ ஒருபோதும் முடியாது. நாம், நம்மை அதற்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அது குறித்து கற்றுக்கொள்ள வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு, மனித குலத்துக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும். மக்கள் உயிர் காக்கும். போக்குவரத்து விபத்துகள் இருக்காது. ஒருவர் மற்றவருடன் தொடர்புடன் இருக்க உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|