விபத்து காப்பீடு பாலிசி குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி விபத்து காப்பீடு பாலிசி குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி ...  மூன்றாவது காலாண்டில் ஜி.டி.பி., 0.4 சதவீதமாக அதிகரிப்பு மூன்றாவது காலாண்டில் ஜி.டி.பி., 0.4 சதவீதமாக அதிகரிப்பு ...
ஆசியாவின் முதல் பணக்காரர் மீண்டும் முகேஷ் அம்பானி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2021
20:39

புதுடில்லி:ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில், மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார், முகேஷ் அம்பானி.

புளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலில், ஆசியாவில், முதல் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, அண்மையில் அந்த இடத்தை சீனாவை சேர்ந்த, ஜாங் ஷான்ஷன் என்பவரிடம் இழந்தார்.

இந்நிலையில், இந்த வாரம், மீண்டும் விட்ட இடத்தை பிடித்துள்ளார், முகேஷ் அம்பானி. இவரது சொத்து மதிப்பு, தற்போது, 5.84 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.சீனாவில், பாட்டில் குடிநீர் வணிகத்தில் கொடி கட்டி பறக்கும், ஜாங் ஷான்ஷன் சொத்து மதிப்பு சரிந்து, தற்போது, 5.59 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.கடந்த வாரம், இவரது வணிகம், 20 சதவீத இழப்பை சந்தித்ததால், இவரது சொத்து மதிப்பும் சரிந்தது.

இரண்டு ஆண்டுகளாக, முதலிடத்தில் இருந்த அம்பானியை, ஜாங் ஷான்ஷன், கடந்த டிசம்பரில் பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தை பிடித்தார். அதுமட்டுமின்றி; இந்த ஆண்டு துவக்கத்தில், பங்குச் சந்தை ஆலோசகர் வாரன் பபெட்டை பின்னுக்குத் தள்ளி, உலகளவில் ஆறாவது இடத்துக்கும் முன்னேறினார், ஜாங் ஷான்ஷன்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் பிப்ரவரி 26,2021
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)