‘ஓலா’ ஸ்கூட்டர் ஆலை படங்கள் வெளியீடு ‘ஓலா’ ஸ்கூட்டர் ஆலை படங்கள் வெளியீடு ...  ‘தரமற்ற கடன்களை கொடுக்காதீர்கள்’ தலைமை பொருளாதார ஆலோசகர் ‘தரமற்ற கடன்களை கொடுக்காதீர்கள்’ தலைமை பொருளாதார ஆலோசகர் ...
ஒப்போ பேண்ட் ஸ்டைல் மற்றும் 5ஜியுடன் ஒப்போ அறிமுகப்படுத்தும் எப்19 ப்ரோ சீரிஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2021
20:06

ஒப்போ நிறுவனம் தனது சமீபத்திய எப்19 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களான எப்19 ப்ரோ+ 5ஜி மற்றும் எப்19 ப்ரோவை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒப்போ எப்19 ப்ரோ+ 5ஜியில் இருக்கும் 48எம்பி கேமிராவுடன் 8எம்பி வைட் ஆங்கிள் கேமிரா, 2எம்பி போர்ட்ரெய்ட் மோனோ கேமிராக்கள், 2எம்பி மேக்ரோ மோனோ கேமிரா ஆகியனவும் அடங்கியுள்ளன. ஏஐ ஹைலைட் போர்ட்ரெய்ட் வீடியோ அம்சமானது வீடியோ போர்ட்ரெய்ட்களை மேம்படுத்துகிறது. டியூவல்-வியூ வீடியோ உடன் ஒரே நேரத்தில் முன்புற, பின்புற கேமிராக்களை இயக்கி படம்பிடிக்க முடியும். ஏஐ நைட் ப்ளேர் போர்ட்ரெய்ட், ஏஐ கலர் போர்ட்ரெய்ட், ஏஐ பியூட்டிபிகேஷன் 2.0, அல்ட்ரா ஸ்டெடி வீடியோ, 4கே வீடியோ போன்ற வசதிகள் உள்ளன.

எப்19 ப்ரோ+ 5ஜி கட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஒரு 4ஜி/5ஜி சீம்லெஸ் டேட்டா தானாக 4ஜி அல்லது 5ஜி சிக்னல் இணைப்பை உங்கள் மொபைலுக்கு அளிக்கும். 50வாட் ப்ளாஷ் சார்ஜ், சூப்பர் நைட் ஸ்டேண்ட்பை மோடு, 173 கிராம் மிகமெல்லிய எடை, போனின் பின்புறத்தில் ஒன் –பீஸ் குவாட் கேமிரா போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. ஒப்போ எப்19 ப்ரோ+ 5ஜி ரூ.25,990 விலையில் கிடைக்கும்.

இதேபோல ஓப்போ எப்19 ப்ரோ போனில் வீடியோ அம்சங்களான டியூவல் வியூ வீடியோ மற்றும் புகைப்படக்கலை அம்சங்களான ஏஐ சீன் என்ஹான்ஸ்மெண்ட் 2.0, டைனமிக் பொக்கே, நைட் ப்ளேர் போர்ட்ரெய்ட், ஏஐ கலர் போர்ட்ரெய்ட், ஏஐ பியூட்டிபிகேஷன் போன்றவை உள்ளன. 173 கிராம் எடையுடன், 7.8 மி.மீ. அல்ட்ரா ஸ்லிம் உருவம், 48எம்பி குவாட் கேமிரா போன்ற வசதிகளுடன் எப்19 ப்ரோ ப்ளூயிட் ப்ளாக் மற்றும் கிரிஸ்டல் சில்வர் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

30வாட் விஒஒசி ப்ளாஷ் சார்ஜ் 4.0, மிகப்பெரிய 4310 எம் ஏ ஹெச் பேட்டரி, கலர் ஓஎஸ்11.1, ஆப் லாக், பிரைவேட் சேஃப் , கேம் போகஸ் மோடு, கேமிங் ஷார்ட்கட் மோடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. ஒப்போ எப்19 ப்ரோ ரூ.21,490க்கும் ( 8+128 ஜிபி), எப்19 ப்ரோ ரூ.23,490க்கும் (8+ 256 ஜிபி) கிடைக்கும்.

ஒப்போ அறிமுகப்படுத்தியுள்ளா பேண்ட் ஸ்டைல் எனும் கைகளில் அணியும் பிரீமியம் உபகரம் தொடர்ச்சியாக ரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கண்டறிவது, இதய துடிப்பு, தூக்கத்தின் இடையே சுவாச தரத்தை மதிப்பிடுவது, ஓட்டத்தைக் கண்காணிப்பது போன்றவற்றை வழங்குகிறது.

உடற்பயிற்சிக்கான 12 நிலைகளையும் இதர வசதியான செயல்பாடுகளையும் கொண்டுள்ளது. அடிப்படையான ஸ்போர்ட் பதிப்பு மற்றும் ஸ்டைல் பதிப்பு என இருவேறு வடிவமைப்புகளில் இதற்கான பட்டைகள் கிடைப்பதால், பயனர்கள் தங்களுக்கு விருப்பமானதை மாற்றிக் கொள்ளலாம். கருப்பு மற்றும் வென்னிலா வண்ணங்களில் வரும் ஒப்போ பேண்ட் ஸ்டைல் பட்டைகள் ஒரு உலோக கொக்கி வடிவமைப்பை ஒருங்கிணைக்கிறது. இந்த வடிவமைப்புடன், பயனர்கள் தங்களது பேண்ட்களை 360 டிகிரிக்கு மாற்றங்கள் செய்து, அணியும் வசதியை அதிகப்படுத்தலாம். ஒப்போ பேண்ட் ஸ்டைல் மிகப்பெரிய 100 எம்ஏஹெச் பேட்டரியைக் கொண்டது. இது 1.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும். ஒப்போ பேண்ட் ஸ்டைல் ரூ.2,999 விலையில் கிடைக்கும்.

புதிய அறிமுக குறித்து ஒப்போ மொபைல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் தலைமை சந்தைப்படுத்துதல் அலுவலர் தம்யந்த் சிங் கனோரியா கூறுகையில் “எப் சீரிஸில் ஒவ்வொரு முறையும் புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தும்போது, ஒரு மத்திய தர ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்கள் விரும்பும் விஷயங்கள் மேலும் அதிகமாகின்றன, என்று தெரிவித்துள்ளார்.

ஓப்போவின் புதிய அறிமுகங்களுக்கான முன்பதிவு 2021 மார்ச் 8 அன்று அமேசான் தளத்தில் தொடங்கியுள்ளது. இவற்றின் விற்பனை மார்ச் 17 அன்று தொடங்கவுள்ளது.

இவையனைத்தும் நேரடி விற்பனையகங்களிலும் இணைய வர்த்தகதளங்களிலும் கிடைக்கும் என்று ஓப்போ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)