பதிவு செய்த நாள்
03 ஏப்2021
20:29

புதுடில்லி:‘சிங்காரி’ செயலிக்கான பிராண்டு துாதுவராக சல்மான் கான் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், மேலும், அவர் சிங்காரி நிறுவனத்தில், முதலீட்டை மேற்கொண்டு இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறு வீடியோக்களுக்கான சீன செயலியான, ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு, இந்தியா தடை விதித்ததை அடுத்து, உள்நாட்டு நிறுவனமான, சிங்காரி இந்தியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சிங்காரியின் பிராண்டு துாதுவராக சல்மான் கான் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அத்துடன், அவர் சிங்காரி நிறுவனத்தில் முதலீட்டை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சல்மான் கான் எவ்வளவு தொகையை, சிங்காரியில் முதலீடு செய்திருக்கிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை.எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை தொட, சல்மான் கானுடன் ஏற்பட்டுள்ள கூட்டு, மிகவும் உதவிகரமாக இருக்கும் என, நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சல்மான் கான் கூறியிருப்பதாவது:மிக குறுகிய காலத்தில், சிங்காரி எப்படி தன்னை தகவமைத்துக்கொண்டது என்பது ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயமாகும். நகரங்கள், கிராமப் பகுதிகளை சேர்ந்த லட்சக் கணக்கானோர் தங்களது தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்ட இது ஒரு சிறந்த தளமாக அமைந்துஉள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|