பங்கு முதலீடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது அப்ஸ்டாக்ஸ் பங்கு முதலீடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது அப்ஸ்டாக்ஸ் ...  வேகமாக வளர முயற்சிக்கணும் பன்னாட்டு நிதியம் அறிவுறுத்தல் வேகமாக வளர முயற்சிக்கணும் பன்னாட்டு நிதியம் அறிவுறுத்தல் ...
கேனன் சினிமா இஓஎஸ் அம்பாசிடராக இணைந்தார் சந்தோஷ் சிவன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2021
22:43

கேனன் நிறுவனம் பிரபல இயக்குனர், ஒளிப்பதிவாளர், திரைப்படத் தயாரிப்பாளர் சந்தோஷ் சிவனைத் தனது சினிமா இஓஎஸ் அம்பாசிடர் புரோகிராமின் ஓர் அங்கமாக இணைத்துக் கொண்டுள்ளது.

இந்தியத் திரைப்பட உலகில் பிரபலமான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். முப்பது ஆண்டு அனுபவத்துடன் தமிழ், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் பல்வேறு படங்களில் பணியாற்றி உள்ளார். சுமர் வர்மா–அண்டர்வாட்டர் சினிமா பிரிவு, அல்போன்ஸ் ராய், பேடி புரதர்ஸ் (விஜய் பேடி அண்ட் அஜய் பேடி), ப்ரியா துவஸ்ஸெர்ரி மற்றும் ராஜேஷ் குப்தா உள்ளிட்ட பல பிரபல ஒளிப்பதிவாளர்களை இந்த புரோக்கிராமின் ஓர் அங்கமாகக் கொண்டுள்ளது.

கேனன் அறிமுகப்படுத்தி உள்ள சமீபத்திய சினிமா மேகராவான இஓஎஸ் சி70 சினிமா கேமராவுடன் சிவன் பணியாற்ற உள்ளார். இது கேனன் நிறுவனத்தின் முதல் ஆர்எப் மவுண்ட் சினிமா இஒஎஸ் கேமரா மற்றும் வித்தியாசமான ஒடிடி கண்டெண்ட் உருவாக்கும் திறன் கொண்டதாகும்.

இதுகுறித்து சந்தோஷ் சிவன் பேசுகையில், ‘கேனன் இஓஎஸ் சினிமா அம்பாசடர் குடும்பத்தின் ஓர் அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த புரோக்கிராம் மூலம், கேனன் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதுடன், நாட்டில் அனைவரும் விரும்பும் ஒளிப்பதிவுக் கலை மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மிரர்லெஸ் ஆர்எப் தொழில்நுட்பத்துடன் கூடிய சினிமா இஓஎஸ் கேமராவைத் தேர்ந்தெடுப்பது தொழில்நுட்ப ரீதியில் மிகச் சிறந்த இணைப்பாகும். கேனன் சினிமா இஓஎஸ் சி70 கேமரா, 8கே வீடியோ ரிக்கார்டிங்க் வசதிகளுடன் கூடிய புரட்சிகரமான மிரர்லெஸ் கேன்ன் இஓஎஸ் ஆர்5 கேமரா ஆகியவை என்னுடைய சமீபத்திய தேர்வுகளாகும்’ என்றார்.

சினிமா இஓஎஸ் அம்பாசிடர் புரோகிராம் குறித்து கன்ஸ்யூமர் சிஸ்டம்ஸ் புராடக்ட்ஸ் மற்றும் இமேஜிங்க் கம்யூனிகேஷன் புராடக்ட்ஸ் இயக்குனர் சி சுகுமாரன் கூறுகையில், ‘சந்தோஷ் சிவனை எங்கள் கேனன் சினிமா இஓஎஸ் அம்பாசிடராக இணைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போதைய மற்றும் எதிர்காலத் தலைமுறை ஒளிப்பதிவாளர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு கேனன் இஓஎஸ் அம்பாசடர் புரோக்கிராம் ஊக்கமளித்து ஆதரவளிக்கும். எங்களது கேனன் சினிமா இஓஎஸ் அம்பாசடர்கள் மூலம் திரைப்படத் தயாரிப்பை சமீபத்திய போக்குகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் பரவலாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்’ என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)