பதிவு செய்த நாள்
14 மே2021
20:34

புதுடில்லி:பட்ஜெட் விமான போக்குவரத்து நிறுவனமான, ‘கோ ஏர்லைன்ஸ்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பித்துள்ளது.
கோ ஏர்லைன்ஸ் நிறுவனம், அண்மையில் நிறுவனத்தின் பெயரை, ‘கோ பர்ஸ்ட்’ என மாற்றம் செய்திருந்தது. இந்நிலையில், 3,600 கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டுள்ளது.‘வாடியா’ குழுமத்துக்கு சொந்தமான இந்த விமான போக்குவரத்து நிறுவனம், 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம், 3,600 கோடி ரூபாய் திரட்டும் பொருட்டு, பங்குதாரர்களின் பங்குகளை விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.திரட்டப்படும் நிதியைக் கொண்டு கடனை அடைக்கவும், விமானங்களை பராமரிக்கவும், ரொக்க இருப்பு வைத்துக் கொள்ளவும் திட்டமிட்டு உள்ளது.
மேலும், எரிபொருள் வாங்கிய வகையில், ‘இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன்’ நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய கடனை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியையோ கொடுக்கவும் திட்டமிட்டு உள்ளது.
இந்நிறுவனம் தற்போது மிகவும் குறைந்த கட்டணத்திலான சேவையை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. தற்சமயம், ‘இண்டிகோ,ஸ்பைஸ்ஜெட்’ ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே, இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கவுசிக் கோனா கூறும்போது, ‘‘கடந்த 15 மாதங்களாக மிகவும் கடினமான காலத்தில் உள்ளது நிறுவனம்.
அசாதாரண சூழல்கள் தொடர்ந்தாலும், கோ பர்ஸ்ட் நிறுவனம், அதில் வாய்ப்புகளை பார்க்கிறது.‘‘நிறுவனத்துக்கு மறுபெயரிட்டது, நாளைய தினம் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது,’’ என, தெரிவித்துள்ளார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|