பதிவு செய்த நாள்
14 மே2021
20:36

புதுடில்லி:இரண்டாவது அலை காரணமாக, வாகனங்களுக்கான தேவை தற்காலிகமாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘டாடா மோட்டார்ஸ்’ தன்னுடைய வாடிக்கையாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் சப்ளையர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும்; சேவைகளை வழங்குவதற்கும், ஒரு வணிகத் திட்டத்தை வகுத்துள்ளதாக தெரிவித்து உள்ளது.மேலும், நிறுவனத்துக்கு தேவைப்படும் நிதியை திரட்டுவது குறித்து, 18ம் தேதியன்று நடக்க இருக்கும் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அன்று நடைபெறும் கூட்டத்தில், மார்ச் காலாண்டு மற்றும் கடந்த நிதியாண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பது சம்பந்தமான முடிவுகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
நிர்வாக குழு கூட்டத்தில், நிறுவனத்துக்கு தேவைப்படும் நிதியை எந்த விதத்தில் திரட்டி கொள்வது என்பது குறித்த விஷயங்கள் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனாலும், எவ்வளவு தொகை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|