பதிவு செய்த நாள்
01 ஜூன்2021
22:33
சென்னை:‘யமஹா மோட்டார் இந்தியா’ நிறுவனம், அதன் வாகனங்களின் விலையை குறைத்து அறிவித்துள்ளது.
‘யமஹா எப்.இசட்., – 25’; ‘எப்.இசட்., எஸ்., – 25’ பைக்குகளின், எக்ஸ் ஷோரூம் விலையை, அதிகபட்சம், 19 ஆயிரத்து 300 ரூபாய் வரை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.உள்ளீட்டு செலவுகள் அதிகரித்ததால், வாகனங்களின் விலையும் அதிகரித்ததாகவும், தற்போது அதை குறைத்துள்ளதால்,அந்த பயன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வகையில், விலை குறைக்கப்பட்டுஉள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இதன்படி, ‘யமஹா எப்.இசட்., 25’ பைக் விலை, 1.34 லட்சம் ரூபாயாகவும், ‘யமஹா எப்.இசட்., எஸ்., 25’ விலை, 1.39 லட்சம் ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், இவற்றின் விலை முறையே, 1.53 லட்சம் ரூபாயாகவும், 1.58 லட்சம் ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|