பதிவு செய்த நாள்
06 ஜூன்2021
20:06

தேசிய பென்ஷன் திட்டமான என்.பி.எஸ்.,சில் இணைவதற்கான வயது வரம்பை, 70 ஆக உயர்த்த, இந்திய பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
ஓய்வு காலத்தில் உதவும் என்.பி.எஸ்., பென்ஷன் திட்டத்திற்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்த திட்டத்தில் இணைவதற்கான வயது வரம்பு, தற்போது 65 ஆக இரு70 ஆக உயர்த்த, பென்ஷன் திட்டத்தை நிர்வகித்து வரும் இந்திய பென்ஷன் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம், 75 வயது வரை என்.பி.எஸ்., பங்களிப்பிற்கு வரி சேமிப்பு சலுகை பெறலாம்.
மேலும் வருவாய்க்கான வழி தெரிவிக்கப்பட்டால், முதலீடு செய்யும் தொகைக்கும் வரம்பு இல்லை என ஆணையம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் 12.64 கோடி பயனாளிகளுடன், பென்ஷன் திட்டங்களுக்கான மொத்த பங்களிப்பு 30 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இதை மேலும் பரவலாக்க பென்ஷன் ஆணையம் விரும்புகிறது. இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.என்.பி.எஸ்., திட்ட முதலீடு, சம பங்கு பலனையும் கொண்டிருப்பதால், நல்ல பலனை அளித்து வருவதாக கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|