பதிவு செய்த நாள்
06 ஜூன்2021
20:18

பொது வருங்கால வைப்பு நிதியான பி.பி.எப்., திட்டம், பொதுவாக வரி சேமிப்பிற்கான முதலீடாக நாடப்பட்டாலும், இந்த திட்டம் பல்வேறு முக்கிய பலன்களையும் கொண்டிருக்கிறது. நீண்ட கால முதலீட்டு தன்மையோடு, நெருக்கடி காலத்தில் கடன் பெறும் வசதி மற்றும் முதிர்வுக்கு பின் நீட்டித்துக்கொள்வது உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன. இந்த அம்சங்கள், பி.பி.எப்., முதலீட்டை மிகச்சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாக அமைக்கின்றன. பி.பி.எப்., அளிக்கும் கூடுதலான பலன்களை அறிந்து கொள்வது, உங்கள் நிதி திட்டமிடலில் உதவியாக அமையும்.
இடர் இல்லை:
அரசு ஆதரவு பெற்ற சிறுசேமிப்பு திட்டம் என்பதால், இதில் முதலீடு செய்யும் தொகை 100 சதவீதம் பாதுகாப்பானது. இந்த திட்டம், எந்த பங்குச்சந்தை நடவடிக்கையுடனும் தொடர்புடையது அல்ல. வங்கி திவாலானாலும் இந்த தொகை பாதுகாப்பானது. மேலும், வங்கி வைப்பு நிதி காப்பீட்டிற்கான தொகையில் இது சேராது.
அதிக பலன்:
இந்த முதலீடு பாதுகாப்பானது என்பதோடு, அதிக வட்டிப்பலன் அளிக்கக்கூடிய முதலீடுகளில் ஒன்றாக அமைகிறது. தற்போது இதன் வட்டி விகித பலன் 7.1 ஆக இருக்கிறது. இது, இடர் குறைந்த தன்மையோடு, இந்த அளவு வட்டிப்பலன் அளிக்கும் திட்டம் என்பதும் முக்கிய அம்சமாகும்.
எளிய முதலீடு:
இந்த திட்டத்தில் முதலீடு செய்வது சிக்கல் இல்லாதது. ஆண்டுக்கு 500 முதல், ஒன்றரை லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். எஸ்.ஐ.பி., முதலீடு போல, மாதந்தோறும் ஒரு தொகையை பிரித்து முதலீடு செய்யலாம். வட்டி வருமானமும் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பதால், கூட்டு வட்டியின் பலனை பெறலாம்.
கடன் வசதி:
நெருக்கடி காலத்தில், பி.பி.எப்., கணக்கில் இருந்து குறுகிய கால கடன் பெறலாம். இதற்கான வட்டி விகிதம் என பார்த்தால் 1 சதவீதம் தான். கணக்கு துவக்கிய பிறகு, மூன்றாம் ஆண்டு முதல், ஆறாம் ஆண்டு வரை இந்த வசதி பொருந்தும். அதன் பிறகு, பகுதி விலக்கல் சாத்தியம்.
நீண்ட காலம்:
பி.பி.எப்., திட்டம் 15 ஆண்டு காலம் கொண்டது. எனினும், முதிர்வுக்கு பின் அதற்கான விண்ணப்பம் சமர்ப்பித்து கணக்கை நீட்டித்துக் கொள்ளலாம். ஐந்தாண்டுகளாக நீட்டித்துக் கொள்ளலாம். ஆரம்ப காலத்திலேயே துவங்கினால், இந்த திட்டத்தை நீட்டிப்பதன் மூலம் ஓய்வு காலத்திற்கு சிறப்பாக திட்டமிடலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|