மெட்டெக் நிறுவனத்துடன் ஊபர் கூட்டாண்மைமெட்டெக் நிறுவனத்துடன் ஊபர் கூட்டாண்மை ...  தயாரிப்பு துறை உற்பத்தி ஜூன் மாதத்தில் குறைந்தது தயாரிப்பு துறை உற்பத்தி ஜூன் மாதத்தில் குறைந்தது ...
பெண்களிடம் தவறான அணுகுமுறை பில்கேட்சை சுற்றும் சர்ச்சைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2021
20:25

புதுடில்லி:‘மைக்ரோசாப்ட்’ இணை நிறுவனர் பில்கேட்ஸ், அவர் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்ட நிலையில், பெண்களிடம் அவர் நடந்து கொண்ட விதம் குறித்து பல்வேறு புகார்கள் தற்போது வரத் துவங்கி இருக்கின்றன.

அவர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களிடம் தவறான அணுகுமுறை கொண்டவராக இருந்ததாகவும்; மக்கள் தொடர்பு விஷயத்தில் அவர் வல்லவராக இருந்ததால், தன்னை சிறந்தவராக காட்டிக் கொண்டதாகவும், ‘பிசினஸ் இன்சைடர்’ இணையதள ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த ஊடக செய்தியில், பில்கேட்ஸ் கோபமும், குறுகிய மனமும் கொண்டவர் என, நான்கு பெண் ஊழியர்கள் கூறியுள்ளனர். பில்கேட்ஸ், கடந்த மே மாதம் மெலிண்டாவிடமிருந்து விவாகரத்துபெற்றார்.

குற்றச்சாட்டு

இதன் பின்னர் சில ஊடகங்கள், பில்கேட்ஸ் பணியிடத்தில் அவரது பொருத்தமற்ற நடத்தை மற்றும் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியான, ஜெப்ரி எப்ஸ்டீன் உடனான அவரது உறவு ஆகியவை குறித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

முன்னாள் மைக்ரோ சாப்ட் நிர்வாக குழு உறுப்பினரான மரியா கிளாவே, பிசினஸ் இன்சைடரிடம், ‘‘பில்கேட்ஸ் பெண் ஊழியர்களால் பரிந்துரைக்கப்படுவதை அதிகம் ஏற்பதில்லை.‘‘அறையில் அவர் தான் புத்திசாலி நபர் என்பது போல் நடந்து கொள்வார்,’’ என குற்றம்சாட்டி உள்ளார்.‘நியூயார்க் டைம்ஸ்’ இதழும், பில்கேட்ஸ் பெண் ஊழியர்களை இரவு உணவுக்கு வெளியே அழைத்த சம்பவங்களை குறிப்பிட்டுள்ளது.

‘வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ தனி அறிக்கை ஒன்றில், 2020 மார்ச்சில், நிர்வாக குழுவிலிருந்து பில்கேட்ஸ் விலகுவதற்கு முன்பு, ஒரு ஊழியருடனான அவரின் முந்தைய காதல் உறவு குறித்து, நிறுவனம் விசாரணையை துவங்கியது என தெரிவித்துள்ளது.

பரோபகாரம்

இது குறித்து பில்கேட்சின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ‘‘கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விவகாரம் இருந்தது. ஆனால் அது இணக்கமாக முடிந்தது. ‘‘நிர்வாக குழுவிலிருந்து அவர் விலகியதற்கும், இவற்றுக்கும் எந்த வகையிலும் தொடர்பு கிடையாது. பில்கேட்ஸ் பரோபகாரத்தில் பல ஆண்டுகளாக தன்னை தொடர்ந்து ஈடுபடுத்தி வருகிறார்,’’ என தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)