பதிவு செய்த நாள்
08 ஜூலை2021
19:27

புதுடில்லி;ஆன்லைன் உணவு வினியோக நிறுவனமான, ‘ஸோமாட்டோ’ 14ம் தேதியன்று புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதாக அறிவித்துள்ளது. அத்துடன், ஒரு பங்கின் விலை 72 – -76 ரூபாய் என நிர்ணயித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த பங்கு வெளியீடு, 14ம் தேதியன்று துவங்கி 16ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் வாயிலாக 9,375 கோடி ரூபாயை திரட்ட, ஸோமாட்டோ திட்டமிட்டு உள்ளது. கடந்த வாரம் தான், இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ வழங்கியது.
இந்த பங்கு வெளியீட்டின் போது 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; 375 கோடி ரூபாய்க்கு பங்குதாரர்களின் பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது. திரட்டப்படும் நிதியை கொண்டு, நிறுவனத்தின் வணிக வளர்சிக்கான முயற்சிகளுக்கும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிறுவனம் கோயல், பங்கஜ் ஆகியோரால் 2008ம் ஆண்டு, ‘புட்டிபே’ எனும் பெயரில் துவக்கப்பட்டு, 2010ல் ஸோமாட்டோ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|