பதிவு செய்த நாள்
14 ஆக2021
20:19

புதுடில்லி:நாட்டின் நிதி தொழில்நுட்ப துறை, நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மட்டும், 14 ஆயிரத்து 800 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும் இது, கடந்த 2020ல் இத்துறையில் பெறப்பட்ட மொத்த முதலீட்டுக்கு சமமான தொகையாகும் என்றும் தெரிவித்துள்ளது.உலகளவில், தொழில்முறை சேவைகளை வழங்கி வரும் கே.பி.எம்.ஜி., நிறுவனம், நிதி தொழில்நுட்ப துறை முதலீடுகள் குறித்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது.இத்துறையில் பெரும்பாலான முதலீடுகள், ‘டிஜிட்டல் பேங்கிங்’ பிரிவில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இதற்கு அடுத்தபடியாக, காப்பீட்டு தொழில்நுட்ப பிரிவு, அதிகளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது.மேலும், பெரும்பாலான முதலீடுகள், உள்நாட்டு நிறுவனங்களிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலும் நடப்பு ஆண்டின் முதல் பாதியில் அதிகளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில், 7.25 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|