புதிய வீட்டை நாடும் இந்தியர்கள் புதிய வீட்டை நாடும் இந்தியர்கள் ...  கைமாறுகிறது ‘பில்டெஸ்க்’ நிறுவனம் கைமாறுகிறது ‘பில்டெஸ்க்’ நிறுவனம் ...
ஆயிரம் சந்தேகங்கள் தங்க கடன் பத்திரம் வாங்கலாமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2021
19:39

‘இப்போது வாங்கு, பிற்பாடு செலுத்து’ எனும் சேவையை வழங்கும் டெபிட் கார்டுகள் லாபகரமானதுதானா?

ராஜராஜேஸ்வரி, கோடம்பாக்கம்.

முதலில் இந்த வசதி, இணைய வர்த்தக நிறுவனங்களிடம் துவங்கியது. கையில் பணம் இல்லையென்றாலும் பொருட்களை வாங்கலாம், 30 நாட்களுக்குள் முழுத்தொகையை செலுத்தலாம் என்ற சலுகைத் திட்டம் இது. இதையே இப்போது இரண்டு வங்கிகள், டெபிட் அட்டையோடு சேர்த்து வழங்குகின்றன. குறிப்பிட்ட நாட்களுக்குள் நீங்கள் பணம் செலுத்தாமல் போனால், வட்டி கடுமையாக இருக்கும். இது கடன் வலையின் ஓர் அங்கம். சிக்கிவிடாதீர்கள்.

எனக்கு வயது 25. நான் 45 அல்லது 50 வயதில் ஓய்வுபெற விரும்புகிறேன். அதற்கு என்னென்ன ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்தால், உதவியாக இருக்கும்?

எஸ்.வைத்யநாதன், புதுடில்லி.

இன்று இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 69 வயது என்று ஆன பின் அரசு ஊழியர் ஓய்வு வயது 60 என்றும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளது ஓய்வு வயது 65 என்றும் மத்திய – மாநில அரசுகளே மாற்றி அமைத்துள்ளன. சிறிய வயதில் ஓய்வு என்ற கற்பனையை, காப்பீட்டு நிறுவனங்கள் வலிந்து விதைக்கின்றன.

இதேபோன்றது தான் ஓய்வுபெறும் போது, கையில் 2 கோடி ரூபாய் இருப்பு வைத்திருப்பது என்ற கற்பனை. இவையெல்லாம் இன்றைய உங்கள் நிகழ்கால வாழ்வை அனுபவிக்க விடாமல், தடுக்கும் முயற்சிகள் என்பது ஞாபகமிருக்கட்டும்.
வீட்டுக்கடனில், வட்டி விகித மாறுதல் கோரி விண்ணப்பித்தேன். அதற்கு 270 ரூபாயும், கட்டட ஆய்வுக் கட்டணமாக 250 ரூபாயும் பிடித்தம் செய்தனர். இது சரியா?

பாலகிருஷ்ணன், மின்னஞ்சல்.

நீங்கள் அதிர்ஷ்டக்காரர். ஏதோ தங்கமான வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியிருக்கிறீர்கள். இவ்வளவு குறைவான கட்டணம் என்பது அரிதினும் அரிது. வட்டி விகித மாறுதல் கோரினால், அசல் கடனில் ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகையை கட்டணமாகச் செலுத்தச் சொல்வர். இதனாலேயே பலர், வட்டி மாறுதல் கோர மாட்டார்கள். வட்டி விகிதம் உயரும் போது, அது உடனடியாக வாடிக்கையாளர் மீது சுமத்தப்படும், ஆனால், குறையும்போது, அந்தப் பலன் உடனடியாக பயனர்களுக்கு வழங்கப்படாது. வீட்டுக் கடனர்களின் சோகங்களில் இதுவும் ஒன்று.

தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் கடன் பெற்று, அதை வங்கி வாயிலாக செலுத்தி முடித்துவிட்டேன். மேற்கொண்டு என் மேல் எந்த நடவடிக்கையும்இருக்காதே?

கு.தனபால், மின்னஞ்சல்.

இருக்க வாய்ப்பில்லை. கடனைக் கட்டி முடித்ததற்கு ஏதேனும் ஆவணமோ, கடிதமோ இருக்கும். அதைக் குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். அது போதுமானது.

தங்கக் கடன் பத்திரம் வாங்கலாமா?

சக்திவேல், மின்னஞ்சல்.

வாங்கலாம். இன்று முதல், செப்., 3 வரை ஐந்து நாட்களுக்கு, தங்கக் கடன் பத்திரத்தின் ஆறாவது வரிசை விற்பனைக்கு வருகிறது. கிராம் ஒன்றின் விலை 4,732 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனிலோ, ‘டிஜிட்டல்’ முறையிலோ பணம் செலுத்துவதாக இருந்தால், இன்னும் 50 ரூபாய் குறைந்து, 1 கிராம் 4,682க்கு வாங்கலாம். வங்கிகள், குறிப்பிட்ட சில அஞ்சலகங்கள், தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளிலும், 1 கிராம் முதல், 4 கிலோ வரை தங்கக் கடன் பத்திரங்கள் வாங்கலாம். முதிர்வு காலம் 8 ஆண்டுகள் என்பதால், கண்ணுக்குத் தெரியாத சேமிப்பாக இது அமையும்.

நான் ஓர் ஆபரண விற்பனைக் கடையில் சீட்டு சேர்ந்து, கட்டி முடித்துவிட்டேன். ஆனால் அந்தக் கடை மூடப்பட்டுவிட்டது. நான் செலுத்திய தொகையை பெற என்ன செய்வது?

எஸ். நாகராஜன், மின்னஞ்சல்.

தங்க நகை சீட்டு என்பது எந்த வகையிலும் முறைப்படுத்தப்படாத திட்டம். வங்கியல்லாத நிதி நிறுவனமாகப் பதிவுபெறாத எந்த ஓர் அமைப்பும், சேமிப்புகளைப் பெறக்கூடாது என்று ஆர்.பி.ஐ., சட்டம் சொல்கிறது. 2013 கம்பெனிகள் சட்டம் வலுப்படுத்தப்பட்ட போது, ‘டைட்டன் இண்டஸ்ட்ரீஸ்’ போன்ற பெரிய கார்ப்பரேட் ஆபரண நிறுவனங்கள், தங்க சேமிப்பு திட்டங்களை நிறுத்திவிட்டன. ஆனாலும் சட்ட ரீதியான ஓட்டைகளைப் பயன்படுத்தி, பல தங்க ஆபரண கடைகள் இத்தகைய சீட்டுகளை நடத்திக்கொண்டு தான் இருக்கின்றன. வாடிக்கையாளர்களான நீங்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

காலஞ் சென்ற தந்தையின் பெயரில் உள்ள வீட்டை விற்று வரும் தொகைக்கு, வாரிசுகள் வருமான வரி செலுத்த வேண்டுமா?

சீதாலட்சுமி, வாட்ஸ் ஆப்.

முதலில், நீங்களும் உங்கள் சகோதர – சகோதரிகளும், வீடு விற்றுவரும் தொகையில் ஒவ்வொருவரும் அவரவர் பங்குக்கு, மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். இதற்கு வீடு வாங்கப்பட்ட ஆண்டை கணக்கில் எடுத்துக்கொண்டு, நீண்டகால ஆதாய வரியா, குறுகிய கால ஆதாய வரியா என்பதை முடிவு செய்து செலுத்துங்கள். அதன் பின் கிடைக்கும் பணத்துக்கு வருமான வரி இல்லை; அது ‘கிப்ட்’டாக கருதப்படும்.

பாதுகாப்பு பெட்டக வசதி சம்பந்தமாக, அண்மையில் ஆர்.பி.ஐ., வெளியிட்டுள்ள விதிமுறைகள், பொதுத் துறை வங்கிகளுக்கு மட்டும் தான் பொருந்துமா? தனியார் துறைக்குப் பொருந்தாதா?

சிவநேசன், வாட்ஸ் ஆப்.

தனியார் துறை வங்கிகளுக்கும் பொருந்தும். ஆர்.பி.ஐ., விதிமுறைகள் தான் இதில் திசை காட்டி என்பதால், தனியார் பாதுகாப்பு பெட்டக சேவை தரும் நிறுவனங்களும் இவ் விதிமுறைகளைப் பின்பற்றியே தீரும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

பிரிமியம் கட்டாமல் போன எல்.ஐ.சி., பாலிசிகளை மீண்டும் புதுப்பிக்க முடியுமா?

சாய்குமார், மின்னஞ்சல்.

ஒருசில குறிப்பிட்ட வகை பாலிசிகளுக்கு, பிரிமியம் கட்டாமல், ஐந்து ஆண்டுகள் ஆகி இருந்தாலும், அவற்றைப் புதுப்பிப்பதற்காகவே, அக்டோபர் 22 வரை ‘சிறப்பு புதுப்பிப்பு முகாமை’ எல்.ஐ.சி., துவங்கியுள்ளது. இதில், தாமதக் கட்டணத்தில் ஒருசில சலுகைகள் வழங்கப்படவிருக்கிறது. எல்.ஐ.சி., அலுவலகத்தை அணுகுங்கள்.

வாச­கர்­களே, நிதி சம்­பந்­தப்­பட்ட உங்­கள் கேள்­வி­களை, ‘இ -– மெயில் மற்­றும் வாட்ஸ் ஆப்’ வாயி­லாக அனுப்­ப­லாம்.

ஆயி­ரம் சந்­தே­கங்­கள்

தின­ம­லர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014 என்ற நம் அலு­வ­லக முக­வ­ரிக்கு அஞ்­சல் வாயி­லா­க­வும் அனுப்­ப­லாம். கேள்­வி­க­ளைச் சுருக்­க­மாக தமி­ழில் கேட்­க­வும்.
ஆர்.வெங்­க­டேஷ்,
pattamvenkatesh@gmail.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)