தங்கம் விலை சவரன் ரூ.400 சரிவுதங்கம் விலை சவரன் ரூ.400 சரிவு ...  52 நிறுவனங்கள் விண்ணப்பம் 52 நிறுவனங்கள் விண்ணப்பம் ...
தொழில் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியல்: முறைகேடுகளால் அதிர்ந்த ‘உலக வங்கி’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2021
20:26

புதுடில்லி:‘எளிதாக தொழில் செய்ய ஏற்ற நாடுகள்’ பட்டியலை, முறைகேடுகள் காரணமாக இனி தயாரிக்கப் போவதில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

முதலீட்டு சூழலின் அடிப்படையில், தொழில் செய்வதற்கு ஏதுவாக எந்த அளவுக்கு ஒவ்வொரு நாடும் இருக்கிறது என்பதை ஆய்வு செய்து, ஆண்டுதோறும் தர வரிசையை பட்டியலிடும் பணியை செய்து வந்தது உலக வங்கி.ஆனால், சில நாடுகள் தரவுகள் விஷயத்தில் முறைகேடு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, இந்த பட்டியல் தயாரிக்கும் முயற்சியையே கைவிடு வதாக அறிவித்துஉள்ளது உலக வங்கி.

விசாரணை

குறிப்பாக 2017ம் ஆண்டில் தர வரிசை பட்டியல் தயாரிக்கப்பட்ட போது, சீனாவின் உயர்மட்ட வங்கி அதிகாரிகள் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்களால் தவறான தரவுகள் பெறப்பட்டிருப்பது, விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது.

இது குறித்து உலக வங்கி தெரிவித்துள்ளதாவது: எளிதாக தொழில் செய்வது குறித்த கடந்த கால மதிப்பீடுகள், தணிக்கை அறிக்கைகள், நிர்வாக இயக்குனர்கள் குழுவின் சார்பாக வெளியிடப்பட்ட வங்கி அறிக்கைகள் உட்பட, அனைத்து தகவல்களையும் மதிப்பாய்வு செய்த பின், இனி தர வரிசை பட்டியலை வெளியிட வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.

புதிய வழி

மேலும், நாடுகளின் வணிக மற்றும் முதலீட்டு சூழலை மதிப்பிட, இனி ஒரு புதிய அணுகு முறையில் செயல்பட உள்ளோம். அத்துடன், வணிக சூழல் குறித்த தர வரிசை பட்டியலை தயாரிக்க முனைப்புடன் பணியாற்றிய பல ஊழியர்களின் முயற்சிகளுக்கு, உலக வங்கி நன்றி உடையதாக இருக்கும். இவர்களின் ஆற்றலையும், உழைப்பையும் புதிய வழிகளில் பயன்படுத்த உள்ளோம்.

உலக வங்கி குழுவின் ஆராய்ச்சி என்பது மிகவும் நம்பிக்கைக்கு உரியதாக கருதப்படுகிறது. இதன் வாயிலாக நாடுகள் சிறந்த முடிவுகளை எடுக்க உதவி வருகிறது. பொருளாதார மற்றும் சமூக மேம்பாடுகளை மிக துல்லியமாக அளவிடவும் உலக வங்கியின் ஆராய்ச்சி உதவி வருகிறது.இத்தகைய ஆராய்ச்சி அறிக்கை தனியார் துறை, மக்கள் சமூகம், கல்வித் துறை, பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவக்கூடிய ஒரு மதிப்புமிக்க கருவியாக உள்ளது. இவ்வாறு உலக வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2018 மற்றும் 2020ம் ஆண்டுகளில் தரவு முறைகேடுகள் குறித்து புகார்கள் எழவும், அடுத்த ஆண்டுக்கான அறிக்கையை உலக வங்கி நிறுத்திவிட்டது. மேலும், தர வரிசை பட்டியலுக்காக மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் மற்றும் தணிக்கைகள் குறித்த விசாரணையையும் உலக வங்கி துவக்கி உள்ளது.தரவுகள் விஷயத்தில் முறைகேடுகள் நடை பெற்றிருப்பதை கண்டுபிடித்த உலக வங்கி, இனி பட்டியல் தயாரிக்கப் போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளது

முன்னேறி வந்த இந்தியா

கடந்த 2020ம் ஆண்டுக்கான, எளிதாக தொழில் செய்ய ஏதுவான நாடுகளின் தர வரிசை பட்டியலில், இந்தியா 14 இடங்கள் முன்னேறி, 63வது இடத்துக்கு வந்தது. 2014 – 2019ம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்தியா, தர வரிசை பட்டியலில் 79 இடங்கள் முன்னேறியது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 190 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:உலகளவிலான எரிசக்தி துறை நிறுவனமான, பி.பி., இந்தியாவில், ஜியோ – பி.பி., எனும் பிராண்டில், அதன் முதல் ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பு பண்டிகை காலத்தில், ‘ஸ்மார்ட்போன்’ களின் விற்பனை, இதுவரை இல்லாத வகையில் 57 ஆயிரம் கோடி ரூபாயை ... மேலும்
business news
மும்பை:‘பேஸ்புக்’ நிறுவனம், அடுத்த வாரத்தில் தன்னுடைய பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி ... மேலும்
business news
வர்த்தக துளிகள் செப்டம்பர் 17,2021
வெளிநாட்டில் ஜாக் மாசீன அரசால் சிக்கல்களுக்கு ஆளான, ‘அலிபாபா’ குழுமத்தின் நிறுவனர் ஜாக் மா, ஒராண்டு ... மேலும்
business news
மும்பை:கொரோனா பாதிப்புகளை அடுத்து, இந்தியாவில் தங்கத்தின் தேவை, நடப்பு ஆண்டில் குறைவதற்கான வாய்ப்பு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)