பதிவு செய்த நாள்
04 நவ2021
23:00

புதுடில்லி:பண்டிகை காலத்தை ஒட்டி, தங்க நகைகளை வாங்கும் நுகர்வோர்கள் ‘ஹால்மார்க்’ முத்திரையிடப்பட்ட நகைகளை மட்டுமே வாங்குமாறு, அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
‘இந்திய தர நிர்ணய கழகம்’ மற்றும் ‘நுகர்வோர் விவகாரத்துறை’ ஆகிய இரண்டும் இணைந்து, தங்க நகை வாங்குவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்கம், வெள்ளி நகைகளை மட்டுமே வாங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஹால்மார்க் முத்திரை தெளிவாக கண்ணுக்குத் தெரியவில்லை எனில், கடைக்காரர்களிடம் பூதக்கண்ணாடியை வாங்கிப் பார்த்து உறுதி செய்துகொள்ளுமாறும் அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 23ம் தேதியில் இருந்து, நாடு முழுவதிலும் உள்ள 256 மாவட்டங்களில் உள்ள நகைகடைகளில், ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசின் உத்தரவு.ஹால்மார்க் முத்திரையை பார்த்து வாங்குவதுடன், நகை வாங்கியதற்கான பில் அல்லது இன்வாய்ஸை கண்டிப்பாக கேட்டுப் பெறுமாறும், அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|