பதிவு செய்த நாள்
04 டிச2021
19:02

புதுடில்லி,:பங்குச் சந்தையின் ஏற்ற --– இறக்கங்கள், பலரது சொத்து மதிப்பை பதம்பார்த்து விடுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று, பணவீக்கம் மற்றும் பொருளாதார இறுக்கம் காரணமாக, அமெரிக்க சந்தையில் தொழில்நுட்ப துறை பங்குகள் சரிவை கண்டன.
இதையடுத்து, உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தன்னுடைய சொத்து மதிப்பில், கிட்டத்தட்ட 1.14 லட்சம் கோடி ரூபாயை இழந்தார். இதையடுத்து, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 20.17 லட்சம் கோடி ரூபாயாக சரிவைக் கண்டுள்ளது என, ‘புளூம்பெர்க் பில்லினியர்ஸ் இண்டெக்ஸ்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மற்றுமொரு தொழில்நுட்ப துறை ஜாம்பவானான, அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ், நிகர சொத்து மதிப்பில், 20 ஆயிரத்து, 250 கோடி ரூபாயை இழந்துள்ளார்.இதற்கு முன் ‘பேஸ்புக்’ என அழைக்கப்பட்டு வந்த, ‘மெட்டா பிளாட்பார்ம்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் சொத்து மதிப்பும் 9, 750 கோடி ரூபாய் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|