பதிவு செய்த நாள்
18 டிச2021
19:13
மும்பை:இந்தியாவைச் சேர்ந்த, ‘இ–மோட்டோராட்’ நிறுவனம், ஜப்பான், நேபாள மின்சார வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
மஹாராஷ்டிராவில், புனேவைச் சேர்ந்த இ – மோட்டோராட் நிறுவனம், 8 விதமான மின்சார இரு சக்கர வாகனங்களை தயாரிக்கிறது.கடந்த ஆண்டு இந்நிறுவனம் முதன் முறையாக மேற்காசியவைச் சேர்ந்த ஐக்கியா அரபு எமிரேட்சில், மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.
இதையடுத்து, நம் அண்டை நாடான நேபாளத்திலும், கிழக்காசிய நாடான ஜப்பானிலும் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.அதன்படி, நேபாளத்தில், ‘டி ரெக்ஸ் மற்றும் இ.எம்.எக்ஸ்.,’ ரக மின்சார இரு சக்கர வாகனங்களையும், ஜப்பானில், ‘கிளைடர் எக்ஸ்ப்ளோரர் மற்றும் டால்பின்’ ரக இரு சக்கர வாகனங்களும் அறிமுகமாகியுள்ளன.
இந்நிறுவனம், 16 ஆயிரத்திற்கும் அதிகமான மின்சார இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜப்பான் மற்றும் நேபாளத்திற்கு, 6,300 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக, இ–மோட்டோராட் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|