பிராட்பேண்டு சேவை வழங்குவதில் முதலிடத்தை இழந்த பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்டு சேவை வழங்குவதில் முதலிடத்தை இழந்த பி.எஸ்.என்.எல்., ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2022
23:42

பிரிட்டனில் பணவீக்கம் அதிகரிப்பு
பிரிட்டனின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. வரும் மாதங்களில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என, பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.எரிபொருள், போக்குவரத்து, உணவு, மரச் சாமான்கள் ஆகியவற்றின் விலை அதிகரித்ததை அடுத்து, சில்லரை விலை பணவீக்கம் பிரிட்டனில் அதிகரித்துள்ளது.
சாதனை படைத்த சந்தை
தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக, நடப்பாண்டில், உலகின் மிகப் பெரிய டெரிவேட்டிவ் எக்ஸ்சேஞ்சாக, தேசிய பங்குச் சந்தை உருவெடுத்துள்ளது.பங்கு மற்றும் கரன்சி டெரிவேட்டிவ் பிரிவில், வர்த்தக ஒப்பந்தங்களின் எண்ணிக்கை அடிப்படையில், உலகளவில் தேசிய பங்குச் சந்தைமுதலிடத்தை பெற்றுள்ளது.
டாடா சி.என்.ஜி., கார்கள்
‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், சி.என்.ஜி., எனும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வாயிலாக இயங்கும் வாகன பிரிவில் கால்பதித்துள்ளது.முதற்கட்டமாக அதனுடைய ‘டியாகோ’ மற்றும் ‘டைகோர் டிரிம்ஸ்’ ஆகிய வாகன பிரிவில், சி.என்.ஜி., கார்களை அறிமுகம் செய்துள்ளது.அடுத்த சில ஆண்டுகளில், இப்பிரிவு நல்ல வளர்ச்சி பெறும் என்பதால், இம்முயற்சியில் இறங்கி உள்ளாதாக, டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
மகிந்திரா – ஹீரோ ஒப்பந்தம்
‘ஹீரோ எலக்ட்ரிக்’ மற்றும் ‘மகிந்திரா குழுமம்’ மின்சார வாகன பிரிவில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக நேற்று அறிவித்துள்ளது.இதன்படி ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் வாகனங்களான ‘ஆப்டிமா’ மற்றும் ‘என்.ஒய்.எக்ஸ்., பைக்’ ஆகியவற்றை மகிந்திரா குழுமம், அதன் ஆலையில் தயாரித்து வழங்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் உற்பத்தி சரிவு
நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில், உற்பத்தி இரண்டு சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் உற்பத்தி குறைந்ததை அடுத்து, இந்த சரிவு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)