வங்கி வாராக் கடன் குறையும்: ‘கிரிசில்’ வங்கி வாராக் கடன் குறையும்: ‘கிரிசில்’ ...  வர்த்தக பற்றாக்குறை 88 சதவீதம் அதிகரிப்பு வர்த்தக பற்றாக்குறை 88 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2022
23:28

டுவிட்டரில் எலன் மஸ்க்

டுவிட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை வாங்கிய டெஸ்லா நிறுவன தலைவர் எலன் மஸ்க், விரைவில் டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜியோ –டி.வி.எஸ்., மோட்டார் கூட்டு

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ஜியோ பி.பி., நிறுவனமும், டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்து நாடு முழுதும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளன.

கோரப்படாத தொகை

பிராங்ளின் டெம்பிள்டன் நிறுவனம், ஆறு மியூச்சுவல் பண்டு திட்டங்களை மூடியதால், முதலீட்டாளர்களுக்கு ரூ.26 ஆயிரத்து 98 கோடி ரூபாய் திரும்ப அளித்துள்ளது. இன்னும், 231 கோடி ரூபாய் கோரப்படாமல் உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா காப்பீடு

கடந்த 2021 டிச., நிலவரப்படி கொரோனா காப்பீடு பிரிமீயம் செலுத்திய, 14.92 லட்சம் பேருக்கு, காப்பீட்டு தொகையான 17 ஆயிரத்து 537 கோடி ரூபாயை பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

‘டிவி’ உரிமத்திற்கு வலைதளம்

டிவி, எப்.எம்., சேனல்களை துவக்க விண்ணப்பிப்பது, பணம் செலுத்துவது உள்ளிட்ட சேவைகளை சுலபமாக பெற ‘பிரட்கேஸ்ட் சேவா போர்டல்’ எனும் வலைதளத்தை, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் துவக்கியுள்ளது.

இரு மடங்கு ஊழியர்கள்

மின்னணு பணப் பரிவர்த்தனை சேவை நிறுவனமான, ‘போன்பி’ அதன் ஊழியர்கள் எண்ணிக்கையை, 2,600லிருந்து 5,400 ஆக உயர்த்த உள்ளது. மும்பை, புனே, பெங்களுரு, டில்லியில் புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)