டொயோடாவின் புதிய ‘கூல் நியூ கிளான்சா’ கார் அறிமுகம்டொயோடாவின் புதிய ‘கூல் நியூ கிளான்சா’ கார் அறிமுகம் ...  நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிப்பு நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிப்பு ...
மேம்பட்ட அம்சங்களுடன் அறிமுகமாகும் மோடோ ஜி22 கைபேசி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2022
19:00

ஜி வரிசை ப்ரான்சைசின் கூடுதல் சிறப்பாக மோடோரோலா பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் கொண்ட மோடோ ஜி22 கைபேசியை அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஐஸ்பர்க் ப்ளூ மற்றும் காஸ்மிக் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. ஏப்ரல் 13 முதல் இதன் விற்பனை ரூ 10,999/- விலையில் ஆரம்பமாகும். வங்கிச் சலுகைகளைப் பெற்று வாடிக்கையாளர்கள் ப்ளிப்கார்ட்டில் ஏப்ரல் 13-14 தேதிகளில் ரூ 9,999/- விலையில் வாங்கி மகிழலாம். மோட்டோ ஜி22 மூன்றாவது வண்ணமான மிண்ட் க்ரீன் விரைவில் கிடைக்கும் என மோடோ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மோடோ ஜி22யில் இருக்கும் கேமரா அமைப்பு சம்மந்தப்பட்ட பிரிவில் 8 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா உள்ள ஒரே க்வாட் கேமரா அமைப்பாகும். வழக்கமான 780 லென்ஸுடன் ஒப்பிடுகையில் 1180 அல்ட்ரா-வைட் கேமரா லென்ஸ் 4x அதிகமாக ஒரே ப்ரேமில் அடக்கும் திறன் கொண்டதாகும். 50 எம்பி மெயின் கேமரா சென்சார் க்வாட் பிக்ஸெல் தொழில்நுட்பம் சூப்பர் ஷார்ப்பாக, அசத்தல் நிழற்படங்களைக் குறைந்த வெளிச்சத்திலும் 4x சிறப்பாக படமெடுக்கும் திறன் பெற்றதாகும்.

மோடோ ஜி22யில் உள்ள 16எம்பி செல்பி கேமரா தொழிற்துறையில் அதி நவீன க்வாட் பிக்ஸெல் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மோடோ ஜி22இல் காணப்படும் நியர்-ஸ்டாக் ஆண்ட்ராயிட் 12 விளம்பரமற்ற அனுபவத்தைத் தரும். கைபேசிகளுக்கான இதன் திங்க் ஷீல்ட் பிசினஸ் கிரேட் வன்பொருள் மற்றும் மென்பொருள் அம்சங்கள் உங்கள் தரவுகளை மால்வேர், ஃபிஷிங்க் மற்றும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும். கேமராவுக்கான டபுள் ட்விஸ்ட், ஃப்ளாஷ் லைட்டுக்கான சாப்-சாப், த்ரீ ஃபிங்கர் ஸ்க்ரீன் ஷாட் ஆகிய சிறப்பம்சங்களும் இக்கருவியில் இருக்கின்றன.
90 ஹெச்இசட் 6.5” ஐபிஎஸ் எல்சிடி பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே தடையற்ற காணும் அனுபத்துக்கு உறுதியளிக்கிறது. 20வாட் டர்போ பவர் சார்ஜருடன் கூடிய நீடித்து உழைக்கும் 5000 எம்ஏஹெச் பேட்டரி பயணிக்கும் போதும் தங்கு தடையிலின்றிப் பயன்படுத்த உதவும். 185 கிராம் எடை, 8.4 எம்எம் மெல்லிய தடிமன், யூவி டெக்ஸ்சருகுடன் கூடிய பிரிமியம் பினிஷ், அழகான கேமரா மாட்யூல் மற்றும் ப்ளாட்பெட் வடிவமைப்பு, சிறப்பான இயக்கத்துக்கு மேம்பட்ட திறன் கொண்ட ஹைப்பர் எஞ்சின் பொருத்தப்பட்ட 4ஜிபி (ஏல்பிடிடிஆர்4 எக்ஸ்) ராம் இந்தியாவின் முதல் மீடியா டெக் ஹீலியோ ஜி37 புராசஸர் ஆற்றலில் செயல்படுகிறது. தண்ணீர் புகா வடிவமைப்பு, பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் பேஸ் அன்லாக் உள்ளிட்ட சிறப்பம்சங்களும் இதிலுண்டு என மோடோ செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)