10 மடங்கு அதிகரிப்பு 10 மடங்கு அதிகரிப்பு ... காப்பீடு திட்டங்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய ரைடர் வசதி காப்பீடு திட்டங்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய ரைடர் வசதி ...
ஓய்வு பலனாக பெற்ற பணத்துக்கு வருமான வரி கட்ட வேண்டுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2022
23:44

என் நண்பர் ஒருவர், தனியார் வங்கியில் 60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். 'கொரோனா' காலத்தில் கடன் தவணை செலுத்த முடியவில்லை. எப்படியும் கடனை திருப்பிச் செலுத்தி விடுவதாக, அவர் உறுதி அளித்து இருந்தும், அவர் வியாபாரம் நடத்தும் இடத்தில், வங்கியைச் சேர்ந்தவர்கள் நேரில் வந்து தொந்தரவு செய்கின்றனர்; தரக்குறைவாக பேசுகின்றனர். அவருக்கு உங்களுடைய பதில் என்ன?+

பாலசுப்பிரமணியன், காஞ்சிபுரம்.


வீட்டில் நகை, நட்டு ஏதேனும் இருக்குமானால், அவற்றை அடகு வைத்து, தனியார் வங்கிக் கடனை அடைத்துவிட்டு வெளியே வரச் சொல்லுங்கள் அல்லது நம்பகமானவர்களிடம் இருந்து கைமாற்றாக கடன் வாங்கியாவது வெளியே வரச் சொல்லுங்கள். அப்படியும் முடியவில்லை எனில், வங்கிக் கிளைக்கே போய், கடனை மறுசீரமைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறதா, வாங்கிய கடனை வேறு ஏதேனும் பொதுத்துறை வங்கிக்கு மாற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறதா என்று பார்க்கச் சொல்லுங்கள். கடன் என்று வரும்போது, பொதுத் துறை வங்கி தான் பெஸ்ட். தனியார் வங்கியோ, வங்கியல்லாத நிதி நிறுவனங்களையோ நான் பரிந்துரைக்க மாட்டேன். கடனை வசூலிப்பதில் தனியார் துறையினர் கில்லாடிகள். அவர்களுக்கு அவர்கள் தந்த பணம் தான் முக்கியம்; உங்களுடைய சிரமங்கள் முக்கியமல்ல; மான, அவமானம் முக்கியமல்ல.

 

என்ன தான் சட்ட திட்டம், வாடிக்கையாளர் உரிமை என்றெல்லாம் பேசினாலும், அவை கவைக்கு உதவாத பேச்சுகளே.ஆசிரியையாக இருந்த நான் சமீபத்தில் ஓய்வு பெற்றேன். ஓய்வு பலனாக நான் பெற்ற பணத்துக்கு வருமான வரி கட்ட வேண்டுமா அல்லது வருங்காலத்தில் இதற்கான வரி கட்ட வேண்டுமா?

கமலா, திருவள்ளூர்.


வருங்காலத்தில் இந்த ஓய்வூதிய பலனை எப்படி பயன்படுத்துகிறீர்களோ, அதற்கேற்ப வரி செலுத்த வேண்டும்.வங்கியில் வைப்பு நிதியாக வைத்திருந்தால், அது ஈட்டும் வட்டி, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்குமானால், அதற்கு வரி செலுத்த வேண்டும். அதனால் தான், அஞ்சலகம், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் ஆகியவற்றில், மூத்த குடிமக்களுக்கான பல திட்டங்கள் வழங்கப்படுகின்றன.இவற்றில் எது உங்களுக்குப் பொருத்தமானதோ, அவற்றில் முதலீடு செய்தால், வரிப் பிடித்தம் இராது. கவனமாக பார்த்து, திட்டமிட்டு முதலீடு செய்து, உரிய பலனை அனுபவியுங்கள். 


வீட்டை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடும்போது அல்லது முடியும்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்என்னென்ன?

புருசோத்தமன், மதுரை.

வீட்டை வாடகை அல்லது குத்தகை விடுவதற்கான விரிவான ஒப்பந்தங்கள் வந்துவிட்டன. அதில், வீட்டு உரிமையாளரது கடமைகள், குடித்தனக்காரர்களது கடமைகள் ஆகியவை தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்த பத்திரத்தை பதிவு செய்து கொள்வது இன்னும் நல்லது. ஆனால், இது தேவையற்ற செலவை ஏற்படுத்தும்; வருமான வரி செலுத்த வேண்டி வரும்; 'பான்' எண் காண்பிக்க வேண்டும்; பெரிய தொல்லையாக இருக்கும் என்றெல்லாம் நிறைய பேர் நினைக்கின்றனர். சைலண்டாக வாடகை வாங்கி, அரசாங்கத்தின் பார்வையில் படாமல் தப்பிக்க முடியுமா என்று யோசிப்பவர்களும் உண்டு. உங்களுக்கு தங்கமான குடித்தனக்காரர் அமைந்துவிட்டால், தப்பித்தீர்கள். எடக்குமுடக்கான நபர் வந்து வாய்த்தால், அவரை வீட்டை விட்டு வெளியேற்ற, உங்களிடம் ஓர் ஆவணமும் இராது. நீதிமன்றம் சென்றாலும் பலன் கிடைக்குமா என்பது சந்தேகமே. இதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.  புத்திசாலித்தனமாக பணத்தை சேமிக்கிறேன் என்று நினைத்து, மொத்த சொத்தையும் இழந்து நிற்பவர்கள் ஏராளம். தமிழ்நாடு வாடகை ஒப்பந்த சட்டம் பற்றி தெரிந்துகொள்ள, https://www.tenancy.tn.gov.in/ எனும் தளத்தை அணுகி பாருங்கள்.



அரசுப் பணியில் இருப்போருக்கு வாரிசுப்படி சொத்து கிடைக்கும் பட்சத்தில், அதை அத்துறையின் தலைமைக்கு தெரிவிக்க வேண்டுமா?

சி.கண்ணன், வத்தலக்குண்டு. 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள், 1973 அப்படித் தான் தெரிவிக்கிறது. அரசுப் பணியாளர்கள் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை, தம் சொத்து விபரங்களை அரசாங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.மரபுரிமையாகக் கிடைத்த சொத்தில் துவங்கி, வங்கி வைப்புகள், ரொக்கம், கடன் பொறுப்புகள் என அனைத்தையும், மார்ச் 31க்கு முன் தெரிவிக்க வேண்டும் என்று சொல்கிறது, இந்த நடத்தை விதிகள்.



நான் பல ஆண்டுகளாக கணக்கு வைத்துள்ள வங்கியில், என் கணக்கோடு திடீரென என் மகளையும் இணைத்து உள்ளனர். நான் வேண்டாம் என்று சொன்னபோது, மகளிடம் இருந்து கடிதம் வேண்டும் என்று கேட்கின்றனர். எனக்கு இவ்வங்கியில் இன்னொரு 'ஜாயின்ட் அக்கவுன்ட்' உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்? 
ராதாகிருஷ்ணன்,குரோம்பேட்டை.


உங்கள் மகள் பெயரை, உங்கள் அனுமதியில்லாமல் சேர்க்க முடியாது.ஒரு கணக்கு வேண்டுமா, வேண்டாமா என்பது உங்களுடைய முடிவு. அது வங்கி மேலாளரது முடிவு அல்ல. இதே வங்கிக் கிளையில், உங்கள் மகளோடு சேர்ந்து, இன்னொரு 'ஜாயின்ட் அக்கவுன்ட்' இருப்பதாகவும் தெரிவித்துள்ளீர்கள். அப்படியானால், இன்னொரு ஜாயின்ட் அக்கவுன்ட் வேண்டாம் என்று சொல்லிப் பாருங்கள். வற்புறுத்தினால், கணக்கை முடித்து வெளியேறி விடுவேன் என்று சொல்லிவிடுங்கள். 



என் சொத்தை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளேன். இதற்கான மூலதன ஆதாய வரியை எப்படி தவிர்ப்பது?

வைத்தியநாதன், கோவை.


மூலதன ஆதாய வரியை தவிர்க்க வரக்கூடிய பணத்தை, அடுத்த இரண்டாண்டுக்குள் இன்னொரு வீட்டை வாங்குவதில் முதலீடு செய்யலாம் அல்லது மூலதன ஆதாய வரிக்கான கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இருப்பினும், நல்ல ஆடிட்டர் ஒருவரை கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கவும்.


ஆர்.வெங்கடேஷ்

ஆயிரம் சந்தேகங்கள்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)