அடுத்தகட்ட வளர்ச்சி: ஆம்புலன்ஸில் '5ஜி' அடுத்தகட்ட வளர்ச்சி: ஆம்புலன்ஸில் '5ஜி' ... வாடகை ஒப்பந்தத்தை ஏன் 11 மாதங்களுக்கு போடுகின்றனர்? வாடகை ஒப்பந்தத்தை ஏன் 11 மாதங்களுக்கு போடுகின்றனர்? ...
வெண்ணெய் போய், ரொட்டி மட்டுமே இருக்கிறது சிறிய கார்கள் விற்பனை: மாருதியின் மனவருத்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2022
02:44

புது­டில்லி,–‘மாருதி சுசூகி’ நிறு­வ­னத்­தின் தலை­வர் ஆர்.சி., பார்­கவா, சிறிய கார்­கள் விற்­பனை சுருங்கி வரு­வ­தாக கூறி­யுள்­ளார்.


புதிய விதி­மு­றை­கள், பொருட்­க­ளின் விலை அதி­க­ரிப்பு, அதிக வரி போன்­ற­வற்­றால், நுழைவு நிலை கார்­க­ளின் விலை அதி­க­ரித்­துள்­ளது. இத­னால், சிறிய ரக கார்­கள் விற்­பனை சரிந்து வரு­கிறது என்று அவர் கூறி­யுள்­ளார்.
அவர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது:


சிறிய கார்­கள் பிரிவு, நிறு­வ­னத்­தின் ரொட்­டி­யும் வெண்­ணெய்­யும் ஆக இருந்­தது. ஆனால், இப்­போது வெண்­ணெய் போய்­விட்­டது. ரொட்டி மட்­டுமே இருக்­கிறது.கடந்த நிதி­யாண்­டில், ‘ஹேட்ச்­பேக்’ ரக கார்­கள் விற்­பனை, 25 சத­வீ­தம் சரி­வைக் கண்­டி­ருக்­கிறது. இது மிக­வும் கவலை தரத் தக்­கது. எதிர்­கா­லத்­தில் நிலைமை சீரா­கும் என எதிர்­பார்க்க இய­லாது.சிறிய ரக கார்­கள் விற்­ப­னை­யின் சரிவு கார­ண­மாக, கடந்த நிதி­யாண்­டில், அப்­பி­ரி­வில் மாருதி விற்­பனை 43.4 சத­வீ­தம் சரிந்­துள்­ளது.


சிறிய ரக கார்­களை வாங்­கும் பிரி­வி­னர், இப்போது அவற்றை வாங்கும் நிலை­யில் இல்லை. எஸ்.யு.வி., பிரிவு கார்­கள் மட்­டுமே அதி­கம் விற்பனை ஆகின்­றன. ‘செடான்’ ரக கார்­கள் விற்­ப­னை­யும் சரிந்­துள்­ளது. அதிக பணம் கொண்­ட­வர்­க­ளால் மட்டுமே கார்­களை வாங்க முடி­கிறது. குறை­வான வரு­மா­னம் உடை­ய­வர்­க­ளால், இரு­சக்­கர வாக­னம் கூட வாங்க முடி­யாத நிலையே இன்று உள்­ளது.


கொள்­கை­களை உரு­வாக்­கு­ப­வர்­கள், சந்­தை­யின் அடி­மட்­டத்­தில் என்ன நடக்­கிறது என்­பதை பார்க்க வேண்­டும்.குறைந்த வரு­மா­னம் உள்­ள­வர்­கள், அவர்­க­ளுக்­கான பிரத்­யேக போக்கு ­வ­ரத்­துக்­கான வச­தியை பெற முடி­யுமா அல்­லது, அதை அவர்­கள் ‘வாங்­கும் சக்தி’ கொண்­ட­வர்­க­ளி­டம் விட்­டுவிட வேண்­டுமா என்ற கேள்வி எழுந்து உள்­ளது.

இது விவா­திக்­கப்­பட வேண்­டிய விஷ­ய­மா­கும்.மாநில அர­சு­கள், சிறிய ரக கார்­கள் பிரி­வின் முக்­கி­யத்­து­வத்தை அங்­கீ­க­ரிக்­கி­றதா என்­பதை பொறுத்­தும்; மத்­திய அரசு, சிறிய கார்­க­ளுக்­கான வரிக் கொள்­கை­களில் மாற்­றம் செய்யுமா என்­பதை பொறுத்­துமே, இந்த சிறிய ரக கார்
பிரி­வில் ஏற்­பட்­டுள்ள சரிவை மாற்­றி­ய­மைக்க, தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடி­யும்.நிறு­வ­னத்தை பொறுத்­த­வரை, பொருட்­க­ளின் விலை­யில் என்ன மாறுதல் நடக்­கிறது என்­பதை பொறுத்தே, கார்­க­ளின் விலையை குறைக்க
முடி­யும்.


தற்­போது தயா­ரிப்பு செலவை குறைக்­கும் வகை­யில், சில மாற்­றங்­க­ளை­யும்; மேம்­பா­டு­களையும் மேற்­கொண்டு வரு­கி­றோம்.
சிறிய ரக கார்­கள் விற்பனைக்­காக அனைத்து தரப்­பி­ன­ரும் சேர்ந்து செயலாற்ற வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­யுள்­ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)