வெண்ணெய் போய், ரொட்டி மட்டுமே இருக்கிறது சிறிய கார்கள் விற்பனை: மாருதியின் மனவருத்தம்வெண்ணெய் போய், ரொட்டி மட்டுமே இருக்கிறது சிறிய கார்கள் விற்பனை: ... ... .வங்கி கணக்கை பாதுகாப்பாக பராமரிக்கும் வழிகள் .வங்கி கணக்கை பாதுகாப்பாக பராமரிக்கும் வழிகள் ...
வாடகை ஒப்பந்தத்தை ஏன் 11 மாதங்களுக்கு போடுகின்றனர்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2022
01:21

எல்.ஐ.சி., - ஐ.பி.ஓ.,வில் பணம் போட்டால், லாபம் ஈட்ட முடியாது என, 'வாட்ஸ் ஆப்' செய்திகள் வருகின்றனவே?   வே.முத்துக்குமார், போளூர்.


பங்குச் சந்தையில் இயங்குபவர்களுக்கு, பலவிதமான எதிர்பார்ப்புகள் உண்டு. அதற்கேற்ப அவர்களுடைய அளவுகோல்களும், மதிப்பீடுகளும் மாறுபடும். எல்.ஐ.சி.,யின் செயல்பாடுகளையும், முதலீடுகளையும் பார்க்கும்போது, இதன் பங்குகளை எவ்வாறு மதிப்பிட வேண்டும் என்ற குழப்பமே, பல மூத்த பங்கு தரகர்களிடம் காணப்படுகிறது.


இன்னொரு பக்கம், நீங்கள் சொல்வது போல், 'வாட்ஸ் ஆப்' அதிமேதாவிகள், எதிர்மறையான கருத்துகளை பரப்பி, தங்கள் அரைவேக்காட்டுத்தனத்தை பரப்பிக் கொண்டு இருக்கின்றனர். எல்.ஐ.சி., - ஐ.பி.ஓ.,வும் வீடு பார்த்தலும் ஒன்று தான். உங்களுக்கு இந்த வீடு பிடித்திருந்தால், முதலீடு செய்யுங்கள்.



எங்கள் மாநிலத்தில் முதலீடு செய்யுங்கள், எங்கள் நாட்டில் முதலீடு செய்யுங்கள் என முழுப் பக்க விளம்பரங்கள் வருகின்றனவே? அவரவர்கள், அவர்களுடைய மாநிலத்திலோ, நாட்டிலோ முதலீடு செய்ய வேண்டியது தானே?


ஏன் பிற இடங்களுக்குச் செல்ல வேண்டும்? உள்ளூர் அரசே அவர்களை ஊக்குவிக்க வேண்டியது தானே? ஏன் வீண் வேலை?
டி.இளங்கோவன், திண்டுக்கல்.



இவையெல்லாம் உள்ளூர் அரசுகள் கொடுக்கும் விளம்பரங்களே. உள்ளூர்காரர்களிடமோ, உள்நாட்டுக்காரர்களிடமோ பெரிய அளவில் முதலீடோ, தொழில் அறிவோ, வணிகத் திறனோ இல்லாதபோது, வெளியே இருந்து முதலீட்டாளர்களை ஈர்க்க முயற்சி செய்கின்றன. இன்றைக்கு பல பெரிய தொழில்களை துவக்குவதற்கு, ஒரு சில லட்சங்களிலோ, கோடிகளிலோ அல்ல, நுாற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கோடிகளில் முதலீடு தேவைப்படுகிறது. வளர்ந்து வரும் புதுப் புது துறைகளில், ஆழ்ந்த அறிவும், ஆற்றலும், அனுபவமும் அவசியமாகிறது. அரசே எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும் பழைய கால 'பேபியன் சோஷலிசம்' என்ற கருத்தில் இருந்து, நாம் வெகுதுாரம் உள்ள 'சந்தைப் பொருளாதாரம்' என்ற இடத்துக்கு வந்துவிட்டோம்.



'நிலத்தையும், மின்சாரத்தையும், இதர அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கிறேன், நீ வந்து தொழில் செய்து, எம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடு' என்பது தான் தற்போதைய அரசுகளின் கோரிக்கை, போட்டாபோட்டி. இது வீண் வேலை அல்ல, காலத்துக்கேற்ற அணுகுமுறை. நிலம் விற்பனை மூலம் எனக்கு பணம் வர உள்ளது. உறவினர்களுக்கு கொடுக்க, மூலதன ஆதாய வரி உண்டா? தெளிவுபடுத்தவும்.
சந்திரா, மின்னஞ்சல்.




நிலத்தை என்ன விலைக்கு வாங்கினீர்கள், எத்தனை ஆண்டுகளாக வைத்திருந்தீர்கள் என்பதையெல்லாம் பொறுத்துத் தான், மூலதன ஆதாய வரியை கணக்கிட முடியும். உறவினர்களுக்கு கொடுப்பதற்கு முன், மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். அருகில் உள்ள நல்ல ஆடிட்டர் ஒருவரை கலந்தாலோசித்து, முடிவு எடுக்கவும்.
என்னுடைய வீட்டில், 10 ஆண்டுகளாக ஒருவர் தொடர்ந்து வாடகைக்கு இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் வாடகை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. 10 ஆண்டுகளுக்கு மேல் இவரே தொடர்ந்து வாடகைக்கு இருந்தால், ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமா? மேலும், பொதுவாக 11 மாத வாடகை ஒப்பந்தம் போட, ஏதேனும் பிரத்யேக காரணங்கள் உள்ளதா?
அ.நாராயணன், மின்னஞ்சல்.



ஒரு காலத்தில், 11 மாத வாடகை ஒப்பந்தம் போட்டுக்கொண்டால், அதை பதிவு செய்ய வேண்டாம். முத்திரைத் தாள் கட்டணம் செலுத்த வேண்டாம். செலவை மிச்சப்படுத்துவதற்காக, இந்த குறுக்கு வழியை பலரும் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், வீடுகள் மற்றும் வர்த்தக கட்டமைப்புகளின் உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் ஆகியோர், உரிமைகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை முறைப்படுத்தும் சட்டம், 2019 முதல் தமிழகத்தில் அமலுக்கு வந்துவிட்டது.




இதில், 12 மாதத்துக்கு குறைவான வாடகை ஒப்பந்தமும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆண்டுகளாக ஒருவர் ஓர் இடத்தில் குடித்தனம் இருந்ததாலேயே, அவரால் அந்த இடத்துக்கு எந்தவிதமான உரிமையும் கொண்டாடிவிட முடியாது. ஒழுங்காக வாடகை கொடுத்துக் கொண்டு இருக்கும் வரை, அவர் வாடகைதாரர் தான். வாடகை கொடுப்பதை நிறுத்தினால், பிரச்னை என்று அர்த்தம்!
என் கிரெடிட் கார்டில் மினிமம் பேலன்ஸ் மட்டும் கட்டினால் போதும், முழுத் தொகையும் கட்டத் தேவை இல்லை என்று சொல்கின்றனரே; அப்படியானால் மீதத் தொகை என்ன ஆகும்?
எஸ்.பிரேம கல்யாணி, சேலம்.



மீதத் தொகை, ஒவ்வொரு மாதமும் மென்மேலும் குட்டி போட்டு, உங்கள் கழுத்தை நெரிக்கும். கிரெடிட் கார்டு பில் முழுவதையும் கட்டுவது தான் புத்திசாலித்தனம். இல்லையெனில், பெரிய கடன்சுமையில் போய்ச் சிக்கிக் கொள்வீர்கள். உங்களைப் போன்றவர்களுக்காகத் தான் ஆர்.பி.ஐ., புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்து உள்ளது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு கம்பெனிகள், இந்த மினிமம் பேலன்சைப் பற்றிச் சொல்லும் போது, அதன் பாதிப்புகளையும் எடுத்துச் சொல்லும்விதமாக, எச்சரிக்கை வாசகம் ஒன்றை அச்சிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.



அதேபோல், வாடிக்கையாளர் எழுத்துப்பூர்வமாக கோராமல், கார்டு வழங்கக் கூடாது. அவர்களுடைய அனுமதி இல்லாமல், கிரெடிட் பேலன்சை அதிகப்படுத்தக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேல், வாடிக்கையாளர் கார்டு வேண்டாம் என்று தெரிவித்துவிட்டால், ஏழு நாட்களுக்குள், அவருடைய கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். அதையும் மீறி, கார்டு சேவை நிறுத்தப்படவில்லை என்றால், கார்டு வழங்கும் நிறுவனம், ஒவ்வொரு நாளும் 500 ரூபாய் அபராதத் தொகையை, வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என்றெல்லாம் ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.



கடன் வசூல் செய்யும் நிறுவனங்கள், எந்தவிதமான முரட்டுத்தனத்தையும் காட்டக்கூடாது என்பது இன்னொரு விதி. ரொம்ப நாளாக எதிர்பார்க்கப்பட்ட விதிகள், ஜூலை முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரப் போகின்றன.



Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)