பதிவு செய்த நாள்
06 மே2022
19:48
கல்விக்கு ரூ.700 கோடி
‘ஆன்லைன்’ உணவு வினியோக தளமான ‘ஸொமேட்டோ’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தீபிந்தர் கோயல், ஊழியர்களின் குழந்தைகளுடைய கல்விக்கு, 700 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்க உள்ளார்.ஊழியர்கள் பங்கு உரிமை திட்டத்தில் இருந்து, கிட்டத்தட்ட 700 கோடி ரூபாயை, இதற்காக ஸொமேட்டோ பியூச்சர் அறக்கட்டளைக்கு நன்கொடையாக அவர் வழங்கவுள்ளார்.
இரு நிறுவனங்களின் இணைப்பு
‘எல்., அண்டு டி., இன்போடெக்’ மற்றும் ‘மைண்டுட்ரீ’ ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து, 26 ஆயிரத்து 950 கோடி ரூபாய் வருவாய் கொண்ட, மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக உருவெடுக்கிறது.இந்த இருநிறுவனங்களும் சேர்ந்து உருவாக்கும் நிறுவனத்தின் பெயர், ‘எல்.டி.ஐ., மைண்டுட்ரீ’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லக்ஷ்மி வேணு நியமனம்
‘சுந்தரம் கிளேட்டன்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக லக்ஷ்மி வேணு நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் கவுரவத் தலைவர் வேணு சீனிவாசனின் மகள்.லக்ஷ்மி வேணு, இதற்கு முன், வாகன பாகங்களை தயாரிக்கும் சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்தார்.
பலத்த வரவேற்பில் எல்.ஐ.சி.,
எல்.ஐ.சி., பங்கு வெளியீட்டில், மூன்றாவது நாளான நேற்றைய நிலவரப்படி, சில்லரை முதலீட்டாளர்கள் பிரிவில், 1.3 மடங்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.பாலிசிதாரர்கள் பிரிவில் 3.86 மடங்கும், ஊழியர்கள் பிரிவில் 2.93 மடங்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. பங்கு வெளியீடு, 9ம் தேதியன்று முடிவடைகிறது. சனி, ஞாயிறு ஆகிய தினங்களிலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெட்ரோல் விலை இவ்வளவா?
நம் நாட்டில், சராசரி பெட்ரோல் விலை 110 ரூபாயை தாண்டியிருக்கும் நிலையில், சில நாடுகளில், பெட்ரோல் விலை நம்பமுடியாத அளவுக்கு குறைவாக இருக்கிறது.வெனிசுலாவில் 1 லிட்டர் 1.70 ரூபாய். லிபியாவில் 1 லிட்டர் பெட்ரோல் 2.40 ரூபாய். ஈரானில் சராசரி விலை, 1 லிட்டருக்கு 4 ரூபாய். நம்புகிற மாதிரியா இருக்கு என்கிறீர்களா? ஆனாலும் இது உண்மை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|