பதிவு செய்த நாள்
12 மே2022
21:10

புதுடில்லி:அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ‘போர்டு’ உலக சந்தைகளுக்காக, இந்தியாவிலிருந்து, மின்சார வாகனங்களை தயாரிக்கும் திட்டத்தில் இருந்தது. இந்நிலையில், தற்போது அந்த திட்டத்தை கைவிட்டு விட்டதாக அறிவித்துள்ளது.
மின்சார வாகன தயாரிப்பை உள்நாட்டில் ஊக்கு விக்கும் விதமாக, இத்துறைக்கு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது. போர்டு நிறுவனமும் இத்திட்டத்தின் கீழ் செயல்பட விண்ணப்பித்தது.இதையடுத்து, இத்திட்டத்தின் கீழ் சலுகைகளுடன் செயல்பட, இந்நிறுவனமும் அரசால் தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், மிகுந்த பரிசீலனைக்கு பிறகு இத்திட்டத்திலிருந்து விலகுவதாகவும்; மின்சார வாகன தயாரிப்பை இந்தியாவில் எந்த ஆலையிலிருந்தும் மேற்கொள்ள போவதில்லை என்றும் இந்நிறுவனம் அறிவித்து உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்நிறுவனம் இந்தியாவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. தற்போது மின்சார வாகன தயாரிப்பும் இல்லை எனும் நிலையில், இந்தியாவில் இருக்கும் ஆலைகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்த பரிசீலனையில் தற்போது இறங்கி உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|