தங்கம் வெள்ளிதங்கம் வெள்ளி ... முதலில் காரை விற்க அனுமதி, பிறகே தயாரிப்பு;  தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் எலான் மஸ்க் முதலில் காரை விற்க அனுமதி, பிறகே தயாரிப்பு; தொடர்ந்து பிடிவாதம் ... ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2022
02:38இடம் தேடும் ‘ஓலா’

‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க தோதுவான 1,000 ஏக்கர் இடத்தை தேடிக் கொண்டிருக்கிறது. இதற்காக இந்நிறுவனம் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அரசுகளுடன் பேச்சு நடத்தி வருகிறது.

வளர்ச்சி 9.2 சதவீதம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த நிதியாண்டில், 9.2 சதவீதமாக இருக்கும் என, ‘பேங்க் ஆப் பரோடா’ தெரிவித்துள்ளது. கிராமப்புற பொருளாதார வளர்ச்சி, ஜி.எஸ்.டி., வசூல் அதிகரிப்பு, வங்கிகளின் கடன் வளர்ச்சி ஆகியவை இதற்கு காரணமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

‘ஜெட் ஏர்வேஸ்’ நஷ்டம்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிப் போன ‘ஜெட் ஏர்வெஸ்’ நிறுவனம், கடந்த மார்ச் காலாண்டில், 234 கோடி ரூபாய் நிகர இழப்பை சந்தித்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் இந்நிறுவனம், கிட்டத்தட்ட 107 கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தேடலில் இறங்கும் ஓ.என்.ஜி.சி.,

நாட்டின் மிகப் பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஓ.என்.ஜி.சி., அடுத்த இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளில், 31 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.

நாட்டின் தற்சார்பை உறுதிப்படுத்தும் வகையில், புதிய எண்ணெய்வயல்கள், எரிவாயு கிணறுகள் ஆகியவற்றை கண்டறிய, இத்தொகை பயன்படுத்தப்பட உள்ளது.

குறைந்த வருமானத்தினருக்கு கிடையாது

பிரபல கட்டுமான நிறுவனமான டி.எல்.எப்., குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான வீடுகள் பிரிவில் இறங்காது என தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம், தொடர்ந்து ஆடம்பர வீடுகள் பிரிவிலேயே கவனம் செலுத்தும் என்றும் அறிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)