பதிவு செய்த நாள்
10 மார்2011
14:02
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இண்டிகா காருக்கு, இந்தியாவில் பெரிய அளவில் மவுசு உண்டு. அதிகளவில் விற்பனையாகும் கார்களில் இதுவும் ஒன்று. இந்த சூழ்நிலையில், புகை மாசு கட்டுப்பாடான, பாரத் ஸ்டேஜ் 4 விதிமுறைகளுக்கு உட்பட்ட இன்ஜின் பொருத்தப்பட்ட புதிய இண்டிகா காரை, அடுத்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், இந்த கார் சிறந்த மைலேஜ் தரும் கார் என்றும் கூறப்படுகிறது. புதிய இண்டிகா கார், ஒரு லிட்டருக்கு 25 கி.மீ., மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறந்த மைலேஜ் தரும் கார் என்ற பெருமை, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ காருக்கு உள்ளது. டீஸலில், இந்த பெருமை நிஸான் நிறுவனத்தின் மைக்ரா கார் பெற்றுள்ளது. மைக்ரா கார், லிட்டருக்கு 23 கி.மீ., மைலேஜ் தருவதாக நிஸான் நிறுவனம் கூறியுள்ளது. புதிய இன்டிகா காரில், புதுப்பிக்கப்பட்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், எரிபொருள் சிக்கனத்தை 46 சதவீதம் அதிகரிக்க செய்யும், மேலும் இன்ஜினின் சக்தி 32 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர காரின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரின் விலை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை இருக்கலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|