நாப்தா விலையில் சரிவு: பாலிமர் விலை குறையும்நாப்தா விலையில் சரிவு: பாலிமர் விலை குறையும் ... தொழில்துறையில் இந்தியா 11.5 சதவீதம் வளர்ச்சி தொழில்துறையில் இந்தியா 11.5 சதவீதம் வளர்ச்சி ...
ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில்:ஆயுள் காப்பீட்டு துறையின் பிரிமிய வருவாய் 24 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2011
01:04

புதுடில்லி:நடப்பு 2010 - 11ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், இந்திய ஆயுள் காப்பீட்டு துறை நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய், 23.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 லட்சத்து 3 ஆயிரத்து 878 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, சென்ற 2009 - 10 நிதியாண்டின் இதே காலத்தில், 83 ஆயிரத்து 891 கோடி ரூபாயாக இருந்தது.ஆயுள் காப்பீட்டு துறையில் முன்னணியில் உள்ள, லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்.ஐ.சி.,) நிறுவனம், இதே காலத்தில், புதிய பிரிமிய வருவாய் வாயிலாக, 73 ஆயிரத்து 122 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தை விட, 34.6 சதவீதம் (54 ஆயிரத்து 320 கோடி ரூபாய்) அதிகமாகும் என, காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (இரிடா) வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வரும் தனியார் துறை நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய், இதே காலத்தில்,4 சதவீதம் மட்டும் அதிகரித்து, அதாவது, 29 ஆயிரத்து 571 கோடி ரூபாயிலிருந்து, 30 ஆயிரத்து 756 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு 2011ம் ஆண்டு, ஜனவரி மாதத்தில், இந்திய ஆயுள் காப்பீட்டு துறை நிறுவனங்களின் பிரிமிய வருவாய், 8,301 கோடி ரூபாயாக இருந்தது.இது, சென்ற பிப்ரவரி மாதத்தில், 8,344 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆக, இவ்விரு மாதங்களுக்கும் இடையில், பிரிமிய வருவாய், 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது.சென்றாண்டு செப்டம்பர் மாதத்தில், 'இரிடா' அமைப்பு, புதிய நெறிமுறைகளை அமல்படுத்தியது. இதனால், நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் வளர்ச்சி குறைந்துள்ளது.இதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், இத்துறை நிறுவனங்களின் பிரிமிய வருவாய் வசூல், 14.5 சதவீதம் குறைந்துள்ளது.சென்ற டிசம்பர் மாதத்தில், இந்நிறுவனங்களின் பிரிமிய வருவாய், 9,709 கோடி ரூபாயாக இருந்தது. 2010ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இந்த புதிய பிரிமிய வருவாய், 7,282 கோடி ரூபாயாக இருந்தது.சென்ற பிப்ரவரி மாதத்தில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பிரிமிய வருவாய், சென்றாண்டின் இதே மாதத்தை விட, 12.9 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. அதே சமயம், இத்துறையில் உள்ளதனியார் துறை நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய், 5 சதவீதம் குறைந்துள்ளது.தனியார் துறையை சேர்ந்த எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரிமிய வருவாய், நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாத காலத்தில், 5,845 கோடி ரூபாயாக இருந்தது. இது, சென்றாண்டின் இதே காலத்தை விட, 11 சதவீதம் (5,267 கோடி ரூபாய்) அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)