பதிவு செய்த நாள்
02 ஏப்2011
10:41
பெங்களூரு : சர்வதேச அளவில், சிறந்த ஏர்போர்ட்டிற்கான விருதை பெங்களூரு சர்வதேச ஏர்போர்ட் லிமிடெட் (பீஐஏஎல்)வென்றுள்ளது. சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்ட இந்த கருத்துக்கணிப்பில், உலகம் முழுவதிலிருந்தும் வந்திருந்த 100 பேரிடம் கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பின் முடிவில், சிறந்த ஏர்போர்ட்டாக பெங்களூரு சர்வதேச விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற ஸ்கைடிராக்ஸ் சர்வதேச ஏர்போர்ட் விருதுகள் வழங்கும் விழாவில், பெங்களூரு சர்வதேச ஏர்போர்ட் லிமிடெட்டிற்கு இந்த விருது வழங்கப்பட்டது. விருது பெற்றபி்ன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பெங்களூரு இண்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சஞ்சய் ரெட்டி கூறியதாவது, இந்த விருதை தாங்கள் பெற்றது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இதன்மூலம், தங்களது ஏர்போர்ட்டிற்கான மதிப்பு சர்வதேச தரத்திற்கு உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|